குணமாலையார் இலம்பகம் |
621 |
|
(வி - ம்.) பொன்னரிமாலை - ஒரு கூந்தலணி. மாலையான் : சீவகன் ; இயல்பினையுடையானாகிய சீவகன் என்னும் பொருட்டு. மாலை : குணமாலை. மாலை - இயல்பு. நாகம் - பாம்பு.
|
( 235 ) |
1086 |
கடுகிய விளையர் நோக்குங் |
|
கண்ணிய பொருளு மெண்ணி |
|
யடுசிலை யழல வேந்தி |
|
யாருயிர் பருகற் கொத்த |
|
விடுகணை தெரிந்து தானை |
|
வீக்கற விசித்து வெய்தாத் |
|
தொடுகழ னரல வீக்கிச் |
|
சொல்லுமின் வந்த தென்றான் |
|
(இ - ள்.) கடுகிய இளையர் நோக்கும் - அரசன் ஆணையிற் கடுகி வந்த ஏவலர் நோக்கையும்; கண்ணிய பொருளும் எண்ணி - அரசன் யானையைக் கண்டு ஆண்திறம் களையக் கருதியதையும் ஒருவாறு சிந்தித்துணர்ந்து; தானை வீக்கற விசித்து - ஆடையை இனி இறுகாதென்னுமாறு இறுக்கி ; வெய்துஆ தொடுகழல் நரல வீக்கி - விரைவாகக் கழலை ஒலிக்கக் கட்டி ; அழல அடுசிலை ஏந்தி - வெம்மையாக அடுதற்குரிய வில்லை ஏந்தி; ஆருயிர் பருகற்கு ஒத்த விடுகணை தெரிந்து - உயிரைப் பருகற்குத் தக்க அம்புகளைத் தெரிந்தெடுத்துக் கொண்டு; வந்தது சொல்லுமின் என்றான் - வந்ததைக் கூறுங்கள் என்றான்.
|
|
(வி - ம்.) தானை - ஆடை, விசித்து - கட்டி. வெய்தாக என்பது ஈறுகெட்டது. நரலுதல் - ஒலித்தல். வந்தது - நீயிர் வருதற்குற்ற காரணம்.
|
( 236 ) |
1087 |
அடிநிழற் றருக வென்றெம் |
|
மாணைவேந் தருளிச் செய்தான் |
|
வடிமலர்த் தாரி னாய்நீ |
|
வருகென வானி னுச்சி |
|
யிடியுரு மேற்றிற் சீறி |
|
யிருநிலஞ் சுடுதற் கொத்த |
|
கடிமதின் மூன்று மெய்த |
|
கடவுளிற் கனன்று சொன்னான். |
|
(இ - ள்.) வடிமலர்த் தாரினாய்! - தெரிந்தெடுத்த மலர் மாலையாய்!; எம் ஆணை வேந்து அடிநிழல் தருக என்று அருளிச் செய்தான் - எமக்குப் பணியிடும் வேந்தன் தன் அடிநிழலிலே கொண்டு வருக என்று அருள் செய்தான் ; நீ வருக என - நீ
|
|