| குணமாலையார் இலம்பகம் |
622 |
|
|
வந்தருள்க என்று ஏவலர் கூற ; வானின் உச்சி இடி உரும் ஏற்றின் சீறி - வான்மீதிருந்து இடிக்கும் இடியேற்றைப்போல முழங்கி ; இருநிலம் சுடுதற்கு ஒத்த கடிமதில் மூன்றும் எய்த கடவுளின் - பெருநிலத்தைப் பறந்து திரிந்து சுடுதற்குப் பொருந்தின காவலுறு மும்மதில்களையும் வீழ்த்திய சிவபெருமானைப் போல ; கனன்று சொன்னான் - வெகுண்டுரைத்தான்.
|
|
|
(வி - ம்.) 'வடிமலர்த்தாரினாய்' எனவும் 'வருக' எனவும் கூறியவற்றை நச்சினார்க்கினியர்தம் பிற்கூற்றுக்கு அரணாக்கக், 'கட்டவந்தவ ரன்மை உணர்க' என்றார்.
|
( 237 ) |
| 1088 |
வாளிழுக் குற்ற கண்ணாள் |
| |
வருமுலை நயந்து வேந்தன் |
| |
கோளிழுக் குற்ற பின்றைக் |
| |
வருகென வானி னுச்சி |
| |
னாளிழுக் குற்று வீழ்வ |
| |
தின்றுகொ னந்த திண்டோ் |
| |
தோளிழுக் குற்ற மொய்ம்ப |
| |
பண்ணெனச் சொல்லி னானே. |
|
|
(இ - ள்.) வாள் இழுக்கு உற்ற கண்ணாள் வருமுலை நயந்து - வாளை வென்ற கண்ணாள் விசயையின் இன்பத்தை விரும்பி ; வேந்தன் கோள் இழுக்கு உற்ற பின்றை - சச்சந்த மன்னன் தன் கொள்கையிற் பிழைத்த பிறகு; கோத்தொழில் நடாத்துகின்றான் - அரசுரிமை எய்தி ஆள்கின்ற கட்டியங்காரனின் ; நாள் இழுக்குற்று வீழ்வது இன்றுகொல் - வாழ்நாள் வழுவி வீழ்வது இன்றுபோலும் ; நந்த! தோள் இழுக்குற்ற மொய்ம்ப! - நந்தட்டனே! பிறர் தோள்கள் பின்னுறும் வலிமையனே!; திண்தேர் பண் எனச் சொல்லினான் - திண்ணிய தேரைப் புனைக என்றுரைத்தான்.
|
|
|
(வி - ம்.) 'தோள் இழுக்குற்ற' என்பதற்குக், 'கட்டியங்காரனின் தோள்கள் இழுக்குற்றன 'என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். மற்றும் அவர், 'வாளிழுக்குற்ற கண்ணாள்' அனங்கமாலை எனக் கொண்டு அனங்கமாலையையும் விரும்பி என்னையொழியத்தர்னே அரசன் தொழிலை நடத்தி வருகின்றான். என்று கட்டியங்காரன் சீவகனைக் கூறியதாகவும் உரைப்பர். எனினும், மேற்கூறிய பொருளையும் ஒப்புவர்
|
( 238 ) |
| 1089 |
வேந்தொடு மாறு கோடல் |
| |
விளிகுற்றார் தொழில தாகுங் |
| |
காய்ந்திடு வெகுளி நீக்கிக் |
| |
கைகட்டி யிவனை யுய்த்தா |
|