பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 63 

   கரும்பொன் - இரும்பு. கதம் - வெகுளி. அரிப : பலவறி சொல் . தெவ்வர் என்றதனை முன்னர் (101) ”மாற்றவர் மறப்படை மலைந்து மதில ப்ற்றின்” என்னும் தொடரோடு அத் தெவ்வர் என இயைத்தல் வேண்டும். திருந்தின்று - திருந்திற்று.

( 75 )
105 வயிரவரை கண்விழிப்ப போன்றுமழை யுகளும்
வயிரமணித் தாழ்க்கதவு வாயின்முக மாக
வயிரமணி ஞாயின்முலை வான்பொற்கொடிக் கூந்தல்
வயிரக்கிடங் காடைமதிற் கன்னியது கவினே.

   (இ - ள்.) வயிரம் அணி ஞாயில் முலை - வயிரப்பூண் அணிந்த ஞாயிலாகிய முலையினையும்; வான் பொன்கொடிக் கூந்தல் - வானளாவும் பொற்கொடியாகிய கூந்தலினையும்; கிடங்கு வயிர ஆடை - அகழியாகிய வயிரம்போன்ற வெள்ளிய ஆடையினையும் உடைய; மதிற் கன்னியது கவின் - மதிலாகிய கன்னியின் அழகு; வயிரவரை கண்விழிப்ப போன்று மழை உகளும் வயிரவரை கண்விழிப்ப போன்று மழை உகளும் வயிரமணித் தாழ்க்கதவு வாயில் முகமாக - வயிர மலைகள் கண் விழிப்பன போன்ற, முகில் புரளும், வயிரமணிகள் இழைத்த தாழ்பொருந்திய கதவுகளையுடைய நாலு வாயிலும் நாலு முகமாக (அமைந்தது).

 

   (வி - ம்.) 'வரைகள் கண்விழிப்பன போன்று கதவையுடைய' என வினைக்குறிப்பொடு முடிந்தது. மழை உகளும் வாயில் எனவே கோபுரமாம். ஞாயில் : புழையின் வழியே பகைவர்மேல் அம்பை எய்து மறையும் 'சூட்டு' என்னும் உறுப்பு. [”கன்னி கவினது' என மாறுக ; அஃது இடப்பொருளுணர்த்திற்று” என்பர் நச்சினார்க்கினியர்.]

 

   இனி, ஆக என்பதை எங்குங் கூட்டி, மதில் இன்னது இன்னதாகக் கவினிடத்தது என்றும் ஆம். மதிலில் இன்னது ஆகையினாலே அம்மதிற் கன்னியதாயிருக்கும் அழகு என்றுமாம்.

( 76 )

அக நகர்

 
106 செம்பொன்மழை போன்றடிதொ றாயிரங்கள் சிந்திப்
பைம்பொன்விளை தீவினிதி தடிந்துபலர்க் கார்த்தி
யம்பொனிலத் தேகுகுடி யகநகர மதுதர
னும்பருல கொப்பததன் றன்மைசிறி துரைப்பாம்.

   (இ - ள்.) பைம்பொன்விளை தீவில் நிதி தடிந்து - புதிய பொன் விளையுந் தீவில் நிதியை வெட்டி; செம்பொன் மழை போன்று அடிதொறு - செம்பொன்னை மழைபோன்று அடிக்கடி சிந்தி; பலர்க்கு ஆயிரங்கள் ஆர்த்தி - பலர்க்கும் பல ஆயிரங்களைக் கொடுத்து நிறைவித்தலாலே; அம் பொன் நிலத்து ஏகுகுடி அகநகரம் அது - மறுமையில் வானுலகத்திலே செல்லுங்