பக்கம் எண் :

                       
குணமாலையார் இலம்பகம் 630 

உறவு மகளிர் சீவகனையிழந்து வருந்தி நிலத்திடை மயங்கி வீழ ; மின் அணி மதியம் கோள்வாய் விசும்பிடை நடப்பதே போல்-ஒளி யணிந்த திங்கள் பாம்பாகிய கோளாற் பற்றப்பட்டு வானிடை செல்வதே போல் ; கடைபல கடந்து சென்றான் - தன் மனையின் பல வாயில்களையும் கடந்து சென்றான்.

 

   (வி - ம்.) கோள் - பிறகோள்களுமாம் ; பரிவேடிப்புமாம். வீரர்களாற் கட்டுண்டு செல்வதாற் பாம்புபற்றிய திங்களும், வீரர்கள் சூழ நடுவே செல்வதாற் கோள்கள் சூழ்ந்த திங்களும் பரிவேடிப்புடைய திங்களும் உவமை. 'இளம் பிடியர்' என்பதூஉம் பாடம். நச்சினார்க்கினியர் உறவு மகளிர் இருநிலம் எய்தக் கண்டு அறிவுரை கூறியதாக இரு செய்யுள்களையும் தொடராக்கி மாட்டேறு செய்வர்.

( 248 )

வேறு

 
1099 வெந்தனம் மனம்மென வெள்ளைநோக்கின் முள்ளெயிற்
றந்துவர்ப் பவளவா யம்மழலை யின்சொலார்
பந்துபாவை பைங்கழங்கு பைம்பொன்முற்றில் சிற்றிலுண்
ணொந்துவைத்து நூபுரம்மொ லிப்பவோடி நோக்கினார்.

   (இ - ள்.) வெள்ளை நோக்கின் முள் எயிற்று அம் துவர் பவளவாய் அம் மழலை இன்சொலார் - வஞ்சம் இல்லாத நோக்கினையும் கூறிய பற்களையும் சிவந்த பவள வாயையும் மழலையான இனிய மொழியையும் உடைய பேதைப் பருவ மகளிர்; மனம் வெந்தன என - இம் மகளிரின் உள்ளங்கள் வருந்தின என்று கண்டார் கூறுமாறு; பந்து பாவை பைங்கழங்கு பைம்பொன் முற்றில் - பந்தும் பாவையும் கழங்கும் சிறு சுளகுமாகியவற்றை; நொந்து சிற்றிலுள் வைத்து - வருந்தித் தாம் கட்டிய சிற்றிலில் வைத்து விட்டு; நூபுரம் ஒலிப்ப ஓடி நோக்கினார் - நூபுரம் புலம்ப ஓடிவந்து பார்த்தனர்.

 

   (வி - ம்.) வெந்தனம் மனம்மென மகரங்கள் சந்தம் நோக்கி விரிந்தன. வெள்ளை நோக்கு : உள்ளொன்றும் கொள்ளாத நோக்கு.

( 249 )
1100 மல்லிகை மலிந்தமாலை சோரவார்ந்த குண்டலம்
வில்விலங்க மின்னுக்கோட்ட வீணைவிட்டு வெய்துரா
யொல்லெனச் சிலம்பரற்ற வீதிமல்க வோடினார்
சில்சுணங் கிளமுலைச் செழும்மலர்த் தடங்கணார்.

   (இ - ள்.) சில் சுணங்கு இளமுலைச் செழுமலர்த் தடங்கணார் - சில தேமல்கள் பரந்த இளமுலையையும் செழுமலரனைய பெருங்கண்களையும் உடைய பெதும்பைப் பருவ மகளிர்; மல்லிகை மலிந்த மாலை சோர - மல்லிகை மலர்நிறைந்த மாலைகள் நழுவ;