பக்கம் எண் :

                     
குணமாலையார் இலம்பகம் 634 

   மணியாகிய கலை என்க. கல்லை என்பது கலை என நின்றது விகாரம். கற்பின் ஒளிக்கு மணியொளி நிகராகாமையின் கற்பினுக்கு உடைந்த மணிக்கல் என்றார். இனி மாமணிக்கல் என்பதற்கு வயிரமணி என்று கொண்டு திண்மையாலே தங்கற்பினுக்குத் தோற்ற மணி என்றும் கொள்ளலாம். தொவை - ஈண்டுப் பருவப் பெயர்.

( 256 )
1107 வட்டிகை மணிப்பலகை வண்ணநுண் டுகிலிகை
யிட்டிடை நுடங்கநொந் திரியலுற்ற மஞ்ஞையிற்
கட்டழ லுயிர்ப்பின்வெந்து கண்ணிதீந்து பொன்னுக
மட்டவிழ்ந்த கோதையர்கள் வந்துவாயில் பற்றினார்.

   (இ - ள்.) மட்டு அவிழ்ந்த கோதையர்கள் - தேன் சொரியும் மாலை அணிந்த மாதர்கள்; வட்டிகை மணிப்பலகை வண்ணம் நுண் துகிலிகை இட்டு - மணிகள் இழைத்த வட்டிகைப் பலகையிலே வண்ணத்தையும் நுண்ணிய எழுதுகோலையும் போகட்டுவிட்டு; நொந்து இரியல் உற்ற மஞ்ஞையின் - வருந்திக் கெடுதலுற்ற மயில்களைப் போல ; கட்டழல் உயிர்ப்பின் வெந்து கண்ணி தீந்து பொன் உக - பெருநெருப்புப் போன்ற மூச்சிலே காய்ந்து கண்ணிகள் தீயவும் பூண்கள் சிதறவும்; இடை நுடங்க வந்து வாயில் பற்றினார் - இடை நொசிய வந்து வாயிலைப் பற்றி நின்றனர்.

 

   (வி - ம்.) வட்டிகை - ஓவியம். தீந்து - தீய : எச்சத்திரிபு. இது கற்புடைமகளிர் நிலை.

( 257 )

வேறு

 
1108 வினையது விளைவு காண்மி
  னென்றுகை விதிர்த்து நிற்பா
ரினையனாய்த் தெளியச் சென்றா
  லிடிக்குங்கொ லிவனை யென்பார்
புனைநல மழகு கல்வி
  பொன்றுமா லின்றொ டென்பார்
வனைகலத் திகிரி போல
  மறுகுமெம் மனங்க ளென்பார்.

   (இ - ள்.) வினையது விளைவு காண்மின் என்று கை விதிர்த்து நிற்பார் - தீவினையின் பயனைக் காணுமின் என்றுரைத்துக் கை நடுங்கி நிற்பார்; இனையனாய்த் தெளியச் சென்றால் இவனை இடிக்கும்கொல் என்பார் - இவ்வாறு வீரர் கையில் அகப்பட்டுத் தெளிவுடன் (கலக்கமின்றி) சென்றால் இவனைக் காவலன் கொல்வானோ என்பார் ; இன்றொடு புனைநலம் அழகு கல்வி பொன்றும்