பக்கம் எண் :

                   
குணமாலையார் இலம்பகம் 637 

தோட்கு இது தகாது என்று - பெரிய வில் பழகிய திண்ணிய தோள்களுக்குக் (கட்டுப்படும்) இஃது ஏற்காது என்றுரைப்பதால்; கருங்கடல் குன்றில் துளுப்பிட்டாங்கு - கரிய கடல் மலையாலே கலக்குற்றாற்போல ; கல் எனக் கலங்கி - கல்லென்னும் ஒலியுடன் கலங்கி ; காமர் அருங்கடி அரணம் மூதூர் - அழகிய, அரிய காவலான அரண்களையுடைய இராசமாபுரம் ; ஆகுலம் மயங்கிற்று - துன்பக் குரலால் மயங்கியது.

 

   (வி - ம்.) 'நிரை மீட்ட தோள்' என்றார் ஆண்டுக் கொல்லாமலே வென்றாற்போல ஈண்டும் கொல்லாமலே வெல்ல வல்லன் என்பது கருதி.

( 262 )
1113 இங்கன மிவர்க ளேக
  வெரியகம் விளைக்கப் பட்ட
வெங்கணை விடலை தாதை
  வியனக ரவல மெய்தி
யங்கவ ருகுத்த கண்ணீ
  ரடித்துக ளவிப்ப நோக்கிப்
பொங்கம ருழக்கும் வேலான்
  புலம்புகொண் டழேற்க வென்றான்.

   (இ - ள்.) இங்கனம் இவர்கள் ஏக - இவ்வாறு இவர்கள் துயருற்றுச் செல்ல; எரியகம் விளைக்கப்பட்ட வெங்கணை விடலை தாதை - தீயில் விளைவிக்கப்பட்ட கொடிய கணை ஏந்திய சீவகன் தந்தையினுடைய; வியன் நகர் அவலம் எய்தி - பெரிய மனையிலுள்ளார் துன்பம் அடைந்து ; அங்கு அவர் உகுத்த கண்ணீர் - அவர்கள் சிந்திய கண்ணீர் ; அடித்துகள் அவிப்ப நோக்கி - செல்கின்றவரின் அடித் துகளை அவித்தலாலே, அவர்களை நோக்கி; பொங்கு அமர் உழக்கும் வேலான் - கிளர்ந்த போரைக் கலக்கும் வேலேந்திய சீவகன் ; புலம்பு கொண்டு அழேற்க என்றான் - புலம்புதல் கொண்டு அழாதீர் என்றான்.

 

   (வி - ம்.) 'எரியை உள்ளே விளைத்த வெங்கணை' எனினும் ஆம். இவன் குணமாலை மனையினின்றும் போந்தான் ; தந்தை மனையில் உள்ளார் புலம்புவதைப் பார்த்தான். ”தாதையினதுவியனகர்” என ஆறாம் வேற்றுமையை விரித்துக் கொள்க.

( 263 )
1114 மின்னினான் மலையை யீர்ந்து
  வேறிரு கூறு செய்வான்
றுன்னினான் றுளங்கி னல்லாற்
  றுளங்கலம் மலையிற் குண்டே