பக்கம் எண் :

                   
குணமாலையார் இலம்பகம் 638 

1114 யன்னதே துணிந்த நீதி
  யருநவை நமனு மாற்றா
னென்னைநோ் நின்று வாழ்த
  லிருநிலத் தாவ துண்டே.

   (இ - ள்.) மின்னினால் மலையை ஈர்ந்து வேறு இரு கூறு செய்வான் துன்னினான் - மின்னைக் கொண்டு மலையைப் பிளந்து வேறாக இரு பிளவு செய்தலை மேற்கொண்டவன்; துளங்கின் அல்லால் - தான் நிலைகுலைதல் அன்றி; துளங்கல் அம் மலையிற்கு உண்டே? - நிலைகுலைதல் அம் மலைக்கு உளதோ ?; துணிந்த நீதி அன்னதே - கட்டியங்காரன் துணிந்த நீதியும் அத்தகையதே; நமனும் அருநவை ஆற்றான் - எனக்குக் காலனும் துன்பியற்ற வல்லவன் அல்லன் ; இருநிலத்து என்னை நோநின்று வாழ்தல் ஆவது உண்டே? - இப் பேருலகில் எனக்கு எதிராகப் பகைத்து நின்று வாழ்வது எவருக்கும் ஆகுமோ?

 

   (வி - ம்.) என்னை : ஐ : அசைநிலை யிடைச்சொல். 'அருநவை நமனும் ஆற்றான்' என்பதற்கு 'அருநவை செய்யும் நமனும் என் எதிர் நின்று வாழ்தலை ஆற்றான்' எனினும் ஆம்.

( 264 )
1115 வளைகடல் வலையிற் சூழ்ந்து
  மால்வரை வேலி கோலி
யுளையரி படுக்க லுற்றான்
  படுப்பினும் படுக்க மற்றென்
கிளையழ வென்னை வாள்வாய்க்
  கீண்டிட லுற்று நின்றான்
றளையவிழ் கண்ணி சிந்தத்
  தன்றலை நிலத்த தன்றே.

   (இ - ள்.) வளைகடல் வலையின் சூழ்ந்து மால்வரை வேலி கோலி - வளைந்த கடலை வலையாகச் சூழவிட்டும் பெரிய மலையை வேலியாகக் கோலியும் ; உளை அரி படுக்கல் உற்றான் - பிடரி மயிரையுடைய சிங்கத்தைச் சிறைப்படுத்த முயன்றவன்; படுப்பினும் படுக்க - சிறைப்படுத்தினும் படுத்துக; (அவற்றானும் என்னை அகப்படுத்தல் அரிது; அதுவும் இவனால் இயலாது) கிளை அழ என்னை வாள்வாய் கீண்டிடல் உற்று நின்றான் தன் தலை - என் உறவினர் அழ என்னை வாளின் வாயாற் பிளத்தலை மேற்கொண்டு நின்றவனுடைய தலை ; தளை அவிழ் கண்ணி சிந்த நிலத்தது - (சிலநாள் செல்லின்) முறுக்கலர்ந்த கண்ணி சிதற நிலத்ததாகும்.

 

   (வி - ம்.) சிலநாள் என்பது ஓராண்டுக் காலம்.