| குணமாலையார் இலம்பகம் |
639 |
|
|
நச்சினார்க்கினியர் 1113 - முதல் மூன்று செய்யுட்களையும் ஒரு தொடராக்கித் தன்னை வாள்வாய்க் கீண்டிடலுற்று நின்ற கட்டியங்காரன் தலை நிலத்ததாம் என்பதனை உட்கொண்டு, அழும் உறவினரை நோக்கித் தன்னை ஒருவரும் ஒன்றுஞ் செய்ய முடியாதென்பதை விளக்கிப் புலம்புகொண்ட ழேற்க என்றான் என முடிப்பர்.
|
( 265 ) |
| 1116 |
நீரகம் பொதிந்த மேக |
| |
நீனிற நெடுநல் யானைப் |
| |
போரகத் தழலும் வாட்கைப் |
| |
பொன்னெடுங் குன்ற மன்னா |
| |
னார்கலி யாணர் மூதூ |
| |
ரழுதுபின் செல்லச் செல்வான் |
| |
சீருறு சிலம்பி நூலாற் |
| |
சிமிழ்ப்புண்ட சிங்க மொத்தான். |
|
|
(இ - ள்.) நீரகம் பொதிந்த மேகம் நீல்நிற நெடுநல் யானை - நீரைத் தன்னிடத்தே கொண்ட முகில் போன்ற கருநிறமுடைய பெரிய களிற்றையும் போரகத்து அழலும் வாள்கை - போரிலே கனலும் வாளேந்திய கையையுமுடைய; பொன் நெடுங்குன்றம் அன்னான் - பொன்னாலான பெரிய மலையைப் போன்ற சீவகன் ; ஆர்கலி யாணர் மூதூர் அழுதுபின் செல்லச் செல்வான் - ஆரவாரத்தையும் புதுவருவாயையுமுடைய பழம்பதியிலுள்ளார் அழுதவாறே பின்வரச் செல்கின்றவன்; சீருறு சிலம்பி நூலால் சிமிழ்ப்புண்ட சிங்கம் ஒத்தான் - சிறப்புற்ற சிலம்பியின் நூலினாற் சிக்குண்ட சிங்கம் போன்றான்.
|
|
|
(வி - ம்.) 'நூல், வீரர்க்குவமை' என்பர் நச்சினார்க்கினியர். மேலும்'புதல் மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று' (குறள். 274) என்றாற்போலக் கொள்க' என்று உவமையுங் கூறுவர்.
|
( 266 ) |
| 1117 |
மன்னர்தம் வெகுளி வெந்தீ |
| |
மணிமுகில் காண மின்னிப் |
| |
பொன்மழை பொழியி னந்து |
| |
மன்றெனிற் புகைந்து பொங்கித் |
| |
துன்னினார் தம்மை யெல்லாஞ் |
| |
சுட்டிடு மென்று செம்பொன் |
| |
பன்னிரு கோடி யுய்த்துக் |
| |
கந்துகன் பணிந்து சொன்னான். |
|
|
(இ - ள்.) மன்னர்தம் வெகுளி வெந்தீ - அரசருடைய வெகுளியாகிய கொடிய நெருப்பு ; மணிமுகில் காணம் மின்னி -
|
|