பக்கம் எண் :

                 
குணமாலையார் இலம்பகம் 641 

1119 நாண்மெய்க்கொண் டீட்டப் பட்டார்
  நடுக்குறு நவையை நீக்க
லாண்மக்கள் கடனென் றெண்ணி
  யறிவின்மை துணிந்த குற்றம்
பூண்மெய்க்கொண் டகன்ற மார்ப
  பொறுமதி யென்று பின்னு
நீண்மைக்க ணின்று வந்த
  நிதியெலாந் தருவ லென்றான்.

   (இ - ள்.) நாண் மெய்க்கொண்டு ஈட்டப்பட்டார் - நாணத்தையே மெய்ப்பொருளாகக் கொண்டு சேர்க்கப்பட்ட பெண்கள் ; நடுக்குறும் நவையை நீக்கல் - அஞ்சத்தகும் குற்றத்தை நீக்குதல் ; ஆண் மக்கள் கடன் என்று எண்ணி - ஆண்மக்களின் கடமை யென்று நினைத்து ; அறிவின்மை துணிந்த குற்றம் - அறிவின்மையால் துணிந்து செய்த பிழையை ; பூண் மெய்க்கொண்டு அகன்ற மார்ப! பொறுமதி - அணிகலன் மெய்யிற் கொண்டு விரிந்த மார்பனே! பொறுத்தருள்க; என்று - என்றுரைத்து; பின்னும் - மேலும்; நீண்மைக்கண் நின்று வந்த நிதியெலாம் தருவல் என்றான் - நெடுங்காலமாக இருந்து வரும் செல்வம் யாவும் கொடுப்பேன் என்றும் கூறினான்.

 

   (வி - ம்.) ஆண்மக்கள் என்பார் ஈண்டு அரசராவார்; உயிரைக் காத்தலும் அழித்தலும் அவர் தொழிலாதலின்.

( 269 )
1120 வாழிய ரிறைவ தேற்றான்
  மாநிரை பெயர்த்த காளை
பீழைதான் பொறுக்க வென்னப்
  பிறங்கிண ரலங்கன் மாலை
சூழ்கதி ராரம் வீழ்நூல்
  பரிந்தற நிமிர்ந்து திண்டோ
ளூழ்பிணைந் துருமிற் சீறி
  யுடல்சினங் கடவச் சொன்னான்.

   (இ - ள்.) இறைவ! வாழியர் - அரசே!. வாழ்வாயாக!- தோற்றான் மாநிரை பெயர்த்த காளை பீழை பொறுக்க என்ன - அறியாமையால் பெருநிரையை மீட்ட சீவகனின் குற்றத்தைப் பொறுத்தருள்க என்று கந்துகன் வேண்ட; பிறங்கு இணர் அலங்கல் மாலை - விளங்கும் பூங்கொத்துக்களையுடைய அசையும் மாலை; வீழ்நூல் பரிந்து - அமைந்த நூல் அறுந்து; சூழ்கதிர் ஆரம் அற - சூழ்ந்த ஒளியையுடைய முத்துமாலை அற்றுப்போக;