| குணமாலையார் இலம்பகம் | 
645  | 
 
  | 
 
| 
    (இ - ள்.) கறவை காண் கன்றின் - தாய்ப்பசுவைக் காணும் கன்றுபோல ; வெஃகிக் கண்டு அடி பணிந்து - விரும்பிக் கண்டு அடிகளில் வணங்கி ; காமர் நறவு அயா உயிர்க்கும் மாலை நாற்றிய இடத்துள் ஏற்றி - அழகிய, தேனைச் சிந்துகின்ற பூமாலை தூக்கிய இடத்தில் அமர்த்தி; அறவியாற்கு ஆறும் மூன்றும் அமைந்த நால் அமிர்தம் ஏந்த - அறத் துறையாளற்கு ஒன்பது முறையும் அமைந்த நான்குவகை உணவுகளைப் படைக்க; பறவை தாது உண்ட வண்ணம் பட்டினிப் பரிவு தீர்த்தான் - வண்டு மகரந்தப் பொடியை உண்பதுபோலப் பசியின் வருத்தத்தைப் போக்கினான். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) ஒன்பது முறை : 'எதிர்கொளல் இடம் நனிகாட்டல் கால் கழீஇ - அதிர்பட அருச்சனை அடியின்வீழ்தரல் - மதுரநன் மொழியொடு மனம்மெய் தூயராய் - உதிர்கநம் வினையென உண்டி ஏந்தினார்' (சீவக. 2828. நச்சி. மேற்) இது நவபுண்ணியக் கிரமம் எனவும்படும். நால் அமிர்து : உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன. 
 | 
  | 
 
| 
    கறவை - கறக்கும் ஆன். கறவைகாண் கன்று ஈண்டுமுகத்தான் அமர்ந்து நோக்கியதற்கு உவமை. மாலை நாற்றியவிடம் என்றது ஒப்பனை செய்யப்பட்ட மணையில் என்றவாறு. அறவியான் - துறவற மேற்கொண்டோன். பறவை - ஈண்டு அறுகாற் சிறுபறவை. 
 | 
( 275 ) | 
 
 
|  1126 | 
ஆய்மணிப் பவளத் திண்ணை |  
|   | 
  யரும்பெறற் கரகத் தங்கட் |  
|   | 
டூய்மணி வாச நன்னீர் |  
|   | 
  துளங்குபொற் கலத்து ளேற்று |  
|   | 
வேய்மணித் தோளி நிற்ப |  
|   | 
  விழுத்தவ னியம முற்றி |  
|   | 
வாய்மணி முறுவ றோன்ற |  
|   | 
  வந்தனை விதியிற் செய்தேன். | 
 
 
 | 
 
| 
    (இ - ள்.) ஆய்மணிப் பவளத் திண்ணை - ஆராய்ந்த மணி அழுத்தின பவளத் திண்ணையிலிருந்து ; அரும்பெறல் கரகத்து அங்கண் - அரியதாகக் கிடைத்த கரகத்தில் உள்ள ; தூய்மணி வாசம் நன்னீர் - தூய நீல மணிபோல் விளங்கும் மணமிகும் நறுநீரை ; துளங்கு பொன் கலத்துள் ஏற்று - ஒளிவிடும் பொற்கலத்திலே (தரையில் வீழாமல்) ஏற்று ; வேய்மணி தோளி நிற்ப - மூங்கிலனைய மணி அணிந்த தோளியாகிய நீ நிற்ப ; விழுத்தவன் நியமம் முற்றி - சிறந்த தவமுடையோன் தன் நியமங்ளை முடித்துக்கொண்ட பின்னர் ; வாய்மணி முறுவல் தோன்ற வந்தனை விதியின் செய்தேன் - வாயில் முத்தனைய முறுவல் தோன்றுமாறு குறையிரக்கும் நிலையுடன் வணக்கத்தை முறையாக இயற்றினேன். 
 | 
  | 
 
| 
    (வி - ம்.) முற்றி - முற்ற : எச்சத்திரிபு. 
 | 
( 276 ) |