பக்கம் எண் :

                     
குணமாலையார் இலம்பகம் 657 

அவன் மக்களும் வந்து சேர்ந்து ; பல்லவர் பிறரும் ஈண்டி - தம் பகுதியிலுள்ள மற்றோரும் வந்து தோழருடன் தொக்கு; பாய்புலி இனத்தின் சூழ்ந்தார் - பாயும் புலியினம் போலச் சூழ்ந்தனர்.

 

   (வி - ம்.) நபுல விபுலர் 'கபில பரணர்' போலக் கொள்க.

 

   காலன் ஆவி கவருங்கால் அவனுக்குதவியாக அவ்வுயிர் கொண்ட உடலைச் சிதைக்குமாறு சீவகன் எளிதில் வெல்லும்படி பகைவர் வலியை அழிக்கும் துணைவர் என்பது கருத்து. காலன் ஏவியவிடத்தே சேறற்கு அவனைச் சூழ்ந்த நோய்கள் என்க. அன்றியும் உயிர்களைக் கவர்தற்குக் காலன் கொண்டல், இடி, மின்னல், நீர், காற்று, தீ, மரம், கல், மண் முதலிய பல பொருள்களையும் ஏவுவன் ஆதலால் அவைகள் என்னினும் பொருந்தும். மாலை : குணமாலை.

( 294 )
1145 மட்டுவா யவிழ்ந்த தண்டார்த்
  தாமரை நாமன் சொன்ன
கட்டமை நீதி தன்மேற்
  காப்பமைந் திவர்க ணிற்பப்
பட்டுலாய்க் கிடந்த செம்பொற்
  கலையணி பரவை யல்கு
லிட்டிடைப் பவளச் செவ்வாய்த்
  தத்தையு மிதனைக் கேட்டாள்.

   (இ - ள்.) மட்டுவாய் அவிழ்ந்த தண்தார்த் தாமரை நாமன் சொன்ன - தேனைத் தன்னிடத்தே கொண்டு அலர்ந்த தண்ணிய தாமரையின் பெயருடையான் (பதுமுகன்) கூறிய ; கட்டு அமை நீதி தன்மேல் காப்பு அமைந்து இவர்கள் நிற்ப - வகுப்பமைந்த முறையிலே காவலாகக் கூடி இவர்கள் நிற்க; பட்டு உலாய்க் கிடந்த செம்பொன் கலை அணி - பட்டுக் கலந்து கிடந்த, பொன்னாலான மேகலை அணிந்த; பரவை அல்குல் - பரப்பமைந்த அல்குலையும்; இட்டு இடை - சிற்றிடையையும்; பவளச் செவ்வாய் - பவளம் போன்ற சிவந்த வாயையும் உடைய; தத்தையும் இதனைக் கேட்டாள் - தத்தையும் சீவகனுக்குற்றதைக் கேள்வியுற்றாள்.

 

   (வி - ம்.) தாமரை நாமன் என்றது பதுமுகனை. கட்டு அமைநீதி - கட்டுப்பாடமைந்த நீதி என்க. இவர்கள்-இந்நபுல விபுலர் முதலியோர். இட்டிடை - சிறிய இடை. தத்தை : காந்தருவதத்தை

( 295 )
1146 மணியியல் யவனச் செப்பின்
  மங்கலத் துகிலை வாங்கிக்
கணைபுரை கண்ணி யேற்ப
  வுடுத்தபின் செம்பொற் செப்பிற்