| குணமாலையார் இலம்பகம் |
664 |
|
| 1157 |
இடியு மின்னும் முழக்கும்மிவற் றானுல கந்நிறைந் |
| |
தொடியு மூழி யிவணின்றுறு கால்வரை கீழ்ந்தென |
| |
நடலை நோக்கிக் கதிர்நாணுவ தொப்ப மறைந்தபின் |
| |
கடலை யேந்தி நிலத்திட்டென மாரி கலந்ததே. |
|
|
(இ - ள்.) உறுகால் வரை கீழ்ந்தென - பெருங்காற்று மலையைப் பிளந்ததாக; மின்னும் இடியும் முழக்கும் இவற்றால் உலகம் நிறைந்து - மின்னாலும் இடியாலும் இடிமுழக்காலும் உலகெங்கும் அம் முகில் நிறைய; நடலை நோக்கிக் கதிர் நாணுவது ஒப்ப மறைந்த பின் - இப் பொய்த் தோற்றத்தைப் பார்த்து, நம்மையின்றியே ஊழி நிகழ்ந்ததென்று ஞாயிறு நாணுவது போல மறைந்த பிறகு ; ஒடியும் ஊழி இவண் இன்று என - உலகம் அழியும் ஊழி இங்கே இப்போது நிகழ்ந்தது என்னும் படி; கடலை ஏந்தி நிலத்து இட்டு என - கடலையெடுத்து நிலமிசை யிட்டாற்போல ; மாரி கலந்தது - மழை கலந்தது.
|
|
|
(வி - ம்.) நிறைந்து - நிறைய ; கீழ்ந்து - கீழ்: எச்சத் திரிபு.
|
|
|
இடியும் மின்னும் முழக்குமாகிய இவற்றான் என்க. உறுகால் - பெருங்காற்று. நடலை - பொய். கதிர் - ஞாயிறு.
|
( 307 ) |
| 1158 |
விண்ணு மண்ணும் மறியாதுவி |
| |
லங்கொடு மாந்தர்தங் |
| |
கண்ணும் வாயும் மிழந்தாங்கடல் |
| |
கொண்டது காண்கெனப் |
| |
பெண்ணு மாணும் மிரங்கப் |
| |
பெருமான்மகன் சாமியை |
| |
யண்ண லேந்தி யகலம்புலிக் |
| |
கொண்டெழுந் தேகினான். |
|
|
(இ - ள்.) விலங்கொடு மாந்தர் - விலங்குகளும் மக்களும்; விண்ணும் மண்ணும் அறியாது - விண்ணெனவும் மண்ணெனவும் அறியாமல் ; தம் கண்ணும் வாயும் இழந்து - கண்ணையும் வாயையும் இழக்குமாறு; ஆம் கடல் கொண்டது காண்க என - மேல் ஊழியிலே வரும் கடல் இப்போது கொண்டதைப் பார்ப்பீராக என்று கூறி; பெண்ணும் ஆணும் இரங்க - பெண்டிரும் ஆடவரும் வருந்த ; பெருமான் மகன் சாமியை - சசசந்தன் மகனான சீவகசாமியை; அண்ணல் ஏந்தி - சுதஞ்சணன் எடுத்து; அகலம் புலிக் கொண்டு - மார்பிலே தழுவிக் கொண்டு; வானில் எழுந்து ஏகினான் - வானில் உயர்ந்து சென்றான்.
|
|
|
(வி - ம்.) விலங்குகள் மேயாமையின் வாயிழந்தன; 'மாமேயல் மறப்ப' (நெடுநல். 2) என்றார் பிறரும்.
|
( 308 ) |