| குணமாலையார் இலம்பகம் |
666 |
|
வேறு
|
|
| 1161 |
மலைத்தொகை யானை மன்னன் |
| |
மைத்துனன் மதன னென்பான் |
| |
கொலைத்தொகை வேலி னானைக் |
| |
கொல்லிய கொண்டு போந்தா |
| |
னலத்தகை யவனைக் காணா |
| |
னஞ்சுயிர்த் தஞ்சி நோக்கிச் |
| |
சிலைத்தொழிற் றடக்கை மள்ளர்க் |
| |
கிற்றெனச் செப்பு கின்றான். |
|
|
(இ - ள்.) மலைத்தொகை யானை மன்னன் மைத்துனன் மதனன் என்பான் - மலைக் கூட்டம் போன்ற யானைக் கூட்டத்தையுடைய வேந்தனின் மைத்துனனாகிய மதனன் என்பவனாகிய; கொலைத் தொகை வேலினானைக் கொல்லிய கொண்டு போந்தான் - கொலைகளைக் கணக்கிடும் வேலேந்திய சீவகனை அரசன் கொல்வதற்குக் கொண்டு வந்தான்; நலத்தகையவனைக் காணான் - நலமிகும் பண்புடைய சீவகனைக் காணாமல்; நஞ்சு உயிர்த்து அஞ்சி நோக்கி - நஞ்சென மூச்சுவிட்டு அச்சத்துடன் பார்த்து ; சிலைத் தொழில் தடக்கை மள்ளர்க்கு - விற்றொழில் புரியும் பெருங்கை வீரர்கட்கு ; இற்றெனச் செப்புகின்றான் - இவ்வாறு பொருத்தமில்லை.
|
|
|
(வி - ம்.) 'மன்னற்கு' என்னும் பாடம் பொருட் பொருத்தமில்லை.
|
|
|
மலைத்தொகை போன்ற யானைத்தொகையையுடைய மன்னன் என்க. தொகை - கூட்டம். மன்னன் - ஈண்டுக் கட்டியங்காரன். மைத்துனனாகிய மதனன் என்பான் என்க. கொலைத்தொகை வேலினான் - கொலைத்தொழின் மிக்க கூட்டமாகிய வேற்படையையுடையவன் என்க. வேலினான் - ஈண்டுச் சீவகன்.
|
( 311 ) |
| 1162 |
மன்னனாற் சீறப் பட்ட |
| |
மைந்தனைக் கொல்லப் போந்தா |
| |
மென்னினிச் சொல்லிச் சேறு |
| |
மென்செய்தும் யாங்க ளெல்லா |
| |
மின்னது பட்ட தென்றா |
| |
லெரிவிளக் குறுக்கு நம்மைத் |
| |
துன்னுபு சூழ்ந்து தோன்றச் |
| |
சொல்லுமின் செய்வ தென்றான். |
|
|
(இ - ள்.) மன்னனால் சீறப்பட்ட மைந்தனைக் கொல்லப் போந்தாம் - அரசனாற் சினக்கப்பெற்ற சீவகனைக் கொல்லக் கைக்கொண்டு வந்த நாம் ; இன்னது பட்டது என்றால் நம்மை எரிவிளக்குறுக்கும் - யாம்பட்ட துன்பம் இத்தன்மைத்தென்று
|
|