பக்கம் எண் :

                   
குணமாலையார் இலம்பகம் 667 

கூறின் நம்மை நடைவிளக்கு எரிப்பான்; யாங்கள் இனி என் சொல்லிச் சேறும் - நாம் இனி யாது கூறிச் செல்வோம்?; என் செய்தும்?- யாது புரிவோம்?; துன்னுபு சூழ்ந்து செய்வது தோன்றச் சொல்லுமின் என்றான் - எல்லோரும் ஒன்று கூடி ஆராய்ந்து செய்யக்கடவதை விளங்கச் சொல்லுங்கோள் என்றான்.

 

   (வி - ம்.) மன்னன் : கட்டியங்காரன். மைந்தன் : சீவகன். சேறும் - செ்லவேம். செய்தும் - செய்வேம். தன் கையறவு தோன்ற என் சொல்லிச் சேறும் என்செய்தும் என்றான். எரி விளக்குறுத்தல் குற்றஞ் செய்தார் தலையில் விளக்கேற்றிவைத்து ஊர்வலஞ் செய்விக்குமொரு தண்டனை. துன்னுபு - கூடி .

( 312 )
1163 வாழ்வதோ ருபாய நாடி மதியுடம் பட்டு வல்லே
சூழ்வினை யாள ராங்க ணொருவனைத் தொடர்ந்து பற்றிப்
போழ்படப் பிளந்து வாளிற் புரட்டியிட்டரியக் கண்டே
யாழ்கல மாந்தர் போல வணிநக ரழுங்கிற் றன்றே.

   (இ - ள்.) சூழ்வினையாளர் - ஆராய்ச்சி செய்தோர்; வாழ்வதோர் உபாயம் நாடி - தாம் உயிர் வாழும் ஒரு சூழ்ச்சியை எண்ணி; மதி உடம்பட்டு - அறிவு ஒன்றுபட்டு; ஆங்கண் ஒருவனை வல்லே தொடர்ந்து பற்றி - ஆங்குச் சென்ற ஒருவனை விரைந்து பின்சென்று ப்ற்றி ; வாளின் போழ்படப் பிளந்து - வாளால் வகிர்படப் பிளந்து; புரட்டியிட்டு அரிய - (வடிவு தெரியாமற்) புரட்டி யிட்டுவைத்து அரிதலைப் பார்த்து ; ஆழ்கலம் மாந்தர் போல - கடலில் அமிழும் கலத்தில் உள்ள மக்களைப் போல ; அணிநகர் அழுங்கிற்று - அழகிய நகரம் வருந்தியது.

 

   (வி - ம்.) சூழ்வினையாளர் நாடி உடம்பட்டு ஒருவனைப் பற்றிப் பிளந்து புரட்டி அரியக் கண்டு நகர் அழுங்கிற்று என்க. வாழ்வதோர் உபாயம் - தாங்கள் கட்டியங்காரன் சினத்திற் றப்பி உயிர்வாழ்தற்குரியதொரு சூழ்ச்சி. ஒருவனை என்றது ஏதிலான் ஒருவனை என்பதுபட நின்றது. அணிநகர்: ஆகுபெயர்.

( 313 )
1164 காய்சின வெகுளி வேந்தே
  களிற்றொடும் பொருத காளை
மாசனம் பெரிது மொய்த்து
  மழையினோ டிருளுங் க்ற்றும்
பேசிற்றான் பெரிதுந் தோன்றப்
  பிழைத்துய்யப் போத லஞ்சி
வாசங்கொ டாரி னானை
  மார்புபோழ்ந் துருட்டி யிட்டேம்.