| பதுமையார் இலம்பகம் |
671 |
|
|
(இ - ள்.) விலங்கி வில் உமிழும் பூணான் - விட்டுவிட்டொளியைச் சிந்தும் அணிகலன்களையுடைய கட்டியங்காரனின்; விழுச் சிறைப்பட்ட போழ்தும் - சீரிய சிறையிலே அகப்பட்ட காலத்தும்; அலங்கல் அம் தாரினான் வந்து - அசையும் அழகிய மாலையை யுடைய சுதஞ்சணன் போந்து; அருஞ்சிறை விடுத்த போழ்தும் - அரிய சிறையிலிருந்து விடுவித்த காலத்தும்; பொன் ஆர்ந்து உலம் கலந்து உயர்ந்த தோளான் - பொன் அணி நிறைந்து, உருண்ட கல்லென இறுகி உயர்ந்த தோள்களையுடைய சீவகன்; புலம்பலும் மகிழ்வும் நெஞ்சிற் பொலிதலும் இன்றி - வருந்தலும் மகிழ்தலும் உள்ளத்திற் பொருந்துதலுமுண்டாகாமல்; ஊழ்வினை என்று விட்டான் - (இரண்டையும்) பழவினைப் பயன் என்றே கருதி நீக்கிவிட்டான்.
|
|
(வி - ம்.) அன்னத்தைச் சிறை செய்த பயனாற் கிடைத்ததாகலின் ‘சீரிய சிறை‘ என்றார். பொலிதலும் : உம் இழிவு சிறப்பு. சாரணரும் பின்னர், ‘சிறைப்பட்டனை போலும்‘ (சீவக. 2890) என்றனர்.
|
|
இதனானும் சீவகனுடைய இன்பத்திற்களிக்காமலும் துன்பத்திற்றுளங்காமலும் இருத்தற்குக் காரணமான மெய்யுணர்ச்சி விதந்தோதப் பட்டமையுணர்க. விழுச்சிறை - இடும்பையுடைய சிறை எனினுமாம்.
|
|
“விழுமம் சீர்மையுஞ் சிறப்பும் இடும்பையும்“ என்பது தொல்காப்பியம் (உரி. 57.)
|
( 2 ) |
| 1168 |
வானர முகள நாக மலர்துதைந் தொழுக வஞ்சித் |
| தேனிரைத் தெழுந்து திங்க ளிறாலெனச் சென்று மொய்க்குங் |
|
| கானம ரருவிக் குன்றிற் காய்கதிர் சுமந்தோர் திங்கண் |
| |
மேனிமிர்ந் தேறி யாங்குத் தேவன்வெற் பேறி னானே. |
|
|
|
(இ - ள்.) நாக மலர் துதைந்து ஒழுக - நாக மலர் தம்முள் நெருங்கித் தேன் வாரும்படி; வானரம் உகள - குரங்குகள் பாய்தலின்; தேன் அஞ்சி இரைத்து எழுந்து - வண்டுகள் அஞ்சி ஆரவாரித்து எழுந்து; திங்கள் இறால் எனச் சென்று மொய்க்கும் - திங்களைத் தேனடையென்று மயங்கிப் போய் மொய்க்கும் வளமுடைய; கான் அமர் அருவிக் குன்றில் - காடமைந்த, அருவி வீழும் வெள்ளி மலையிலே; காய்கதிர் சுமந்து ஓர் திங்கள் மேல் நிமிர்ந்து ஏறி யாங்கு - வெம்மையுறும் ஞாயிற்றைச் சுமந்து ஒரு திங்கள் மேலே நிமிர்ந்த ஏறினாற் போல; தேவன் வெற்பு ஏறினான் - சுதஞ்சணன் சீவகனைச் சுமந்து சந்திரோதய மலைமீது ஏறிச் சென்றான்.
|
|
(வி - ம்.) ‘ஒழுக‘ என்பதற்குத் தேன் எனும் எழுவாயை வருவிக்க.
|
|
நாகமலர் - சுரபுன்னைப்பூ. துதைந்து - நெருங்கி. இறால் - தேனடை. கான் - காடு. குன்று - ஈண்டு வெள்ளிமலை. சுதஞ்சணனுக்குத் திங்களும் சீவகனுக்கு ஞாயிறும் உவமைகள்.
|
( 3 ) |