| நாமகள் இலம்பகம் |
68 |
|
| 114 |
பொன்சொரி கதவு தாளிற் றிறந்துபொன் யவனப் பேழை |
| |
மின்சொரி மணியு முத்தும் வயிரமுங் குவித்துப் பின்னு |
| |
மன்பெரும் பவழக் குப்பை வாலணி கலஞ்செய் குப்பை |
| |
நன்பக லிரவு செய்யு நன்கலங் கூப்பி னாரே. |
|
|
(இ - ள்.) பொன் சொரி கதவு தாளின் திறந்து - பொன்தானே சொரிதற்குக் காரணமான கதவைத் தாழ்கோலால் திறந்து; பொன் யவன பேழை - யவனர் செய்த பொற்பேழையிலிருந்து; மின்சொரி மணியும் முத்தும் வயிரமும் குவித்து - ஒளி விடும் மணிமுத்து வயிரம் ஆகியவற்றைக் குவித்து; பின்னும் - மேலும்; மன்பெரும் பவழக் குப்பை - மிகப் பெரிய பவளத் திரள்களையும்; வால் அணிகலம் செய்குப்பை - (முற்றுறாத) தூய அணிகலக் குவியல்களையும்; நன்பகல் இரவு செய்யும் நன்கலம் கூப்பினார் - நல்ல பகற்போதை இரவாக்கும் நீலமணிக்கலன்களையும் குவித்தனர்.
|
|
|
(வி - ம்.) நன்பகல் - கடும்பகல்.
|
( 85 ) |
| 115 |
விழுக்கலஞ் சொரியச் சிந்தி வீழ்ந்தவை யெடுத்துக் கொள்ளா |
| |
வொழுக்கின ரவர்கள் செல்வ முரைப்பரி தொழிக வேண்டா |
| |
பழுக்குலைக் கமுகுந் தெங்கும் வாழையும் பசும்பொன் னாலு |
| |
மெழிற்பொலி மணியி னாலுங் கடைதொறு மியற்றி னாரே. |
|
|
(இ - ள்.) விழுக்கலம் சொரியச் சிந்தி வீழ்ந்தவை எடுத்துக் கொள்ளா ஒழுக்கினர் - சிறந்த அணிகலன்களைச் சொரியும் போது சிதறி விழுந்தவற்றை எடுத்துக்கொள்ளாத வாழ்வினர்; பழுக்குலைக் கமுகும் தெங்கும் வாழையும் - பழுத்த குலைகளையுடைய கமுகையும் தென்னையையும் வாழையையும்; பசும்பொன்னாலும் எழில்பொலி மணியினாலும் - புதிய பொன்னாலும் அழகு மிக்க மணிகளாலும்; கடைதொறும் இயற்றினார் - கடைகளையெல்லாம் அணிசெய்வித்தனர். (ஆதலால்); அவர்கள் செல்வம் உரைப்பரிது; வேண்டா ஒழிக - அவர்களுடைய செல்வச் சிறப்பு என்னால் உரைத்தலரிது; நீவிரும் கேட்க விரும்பவேண்டா; ஒழிக.
|
( 86 ) |
| 116 |
மூசுதே னிறாலின் மூச மொய்திரை யியம்பி யாங்கு |
| |
மோசையென் றுணரி னல்லா லெழுத்துமெய் யுணர்த லாகாப் |
| |
பூசுசாந் தொருவர் பூசிற் றெழுவர்தம் மகலம் பூசி |
| |
மாசன மிடம்பெ றாது வண்கடை மலிந்த தன்றே. |
|
|
(இ - ள்.) மா சனம் இடம் பெறாது - மிகுதியான மக்கள் திரள் போக்கிடம் பெறாமல்; பூசு சாந்து ஒருவர் பூசிற்று எழுவர்
|
|