| பதுமையார் இலம்பகம் | 
685  | 
  | 
| 
    (வி - ம்.) வரகு - ஒரு கூலம். வாள் - அரிவாள். தேன் - ஒருவகை வண்டு. யாழ்செயும் - யாழிசைபோல முரலும். 
 | 
( 31 ) | 
|  1197 | 
ஆங்க வெல்லை யிகந்தடு தேறலும் |  
|   | 
பூங்கட் பொற்குட முந்நிறைத் தீண்டிய |  
|   | 
வேங்கு கம்பலத் தின்னிசை சூழ்வயற் |  
|   | 
றாங்கு சீர்த்தக்க நாட்டணி காண்டியே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஆங்கு அவ் எல்லை இகந்து - அந்தக் காட்டின் எல்லையைக் கடந்துபோய்; அடு தேறலும் பூங்கள் பொற்குடமும் நிறைத்து - காய்ச்சிய நறவினையும் மலரிலிருந்தெடுத்த கள்ளையும் பொற்குடங்க ளெல்லாவற்றினும் நிறைத்து; ஈண்டிய ஏங்கு கம்பலத்து இன் இசை - செறிந்த தேங்கிய ஆரவாரத்துடன் எழுப்பும் இனிய இசை; சூழ் வயல் - சூழ்ந்த வயலினையும்; தாங்கு சீர் - ஏந்திய புகழையும் உடைய; தக்க நாட்டு அணி காண்டி - தக்க நாட்டின் அழகைக் காண்பாயாக. 
 | 
| 
    (வி - ம்.) 'இன்னிசை யீண்டிய ஏங்கு கம்பலத்தைச் சூழ்வயல்' என மொழிமாற்றிப் பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர். கம்பலம் : கம்பலை என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது. ஏங்குதல் - ஒலித்தல். 'ஏங்கிய மிடறு' (சிலப். 3. 51) என்றார் பிறரும். 
 | 
( 32 ) | 
வேறு
 | 
|  1198 | 
பாளைவாய்க் கமுகி னெற்றிப் படுபழ முதிர விண்டு |  
|   | 
நீள்கழைக் கரும்பி னெற்றி நெய்ம்முதிர் தொடையல் கீறி |  
|   | 
வாளைவா யுறைப்ப நக்கி வராலொடு மறலு மென்ப |  
|   | 
காளைநீ கடந்து செல்லுங் காமரு கவின்கொ ணாடே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) காளை! நீ கடந்து செல்லும் காமரு கவின் கொள் நாடு - காளையே! நீ காட்டைக் கடந்து செல்லும் விருப்பூட்டும் அழகுறு நாடு; கமுகின் நெற்றிப் பாளைவாய்ப் படுபழம் விண்டு உதிர - கமுகின் உச்சியிலே பாளையின்கண் உண்டாகிய பழம் விண்டு உதிர்தலால்; நீள் கழைக் கரும்பின் நெற்றி நெய்ம்முதிர் தொடையல் கீறி - நீண்ட கழையாகிய கரும்பின் உச்சியிலே முதிர்ந்த தேனடையைக் கீண்டு; வாளை வாய் உறைப்ப நக்கி - (குளத்திலுள்ள) வாளையின் வாயிலே தேன் துளி துளிக்க அதனை நக்கி; வராலொடு மறலும் - வராலுடன் மாறுபடும். 
 | 
| 
    (வி - ம்.) நெய் - தேன். என்ப : அசை. வராலொடு வாளை தேன் துளியை நக்கி மாறுபடும் என்றுரைப்பர் நச்சினார்க்கினியர். 
 | 
| 
    கமுகின் நெற்றிப் பாளைவாய்ப் படுபழம் என மாற்றுக. கழைக் கரும்பு - கோலாகிய கரும்பு; ஒருவகைக் கரும்பெனலுமாம். தொடையல் - தேனிறால். உறைப்ப - துளியாக விழ. கவின் - அழகு. 
 | 
( 33 ) |