பதுமையார் இலம்பகம் |
689 |
|
1206 |
அண்ணன்மே லரிவையர் கண்ணின் மொய்த்தவண் |
|
மண்ணின்மேன் மாந்தர்கண் மொய்க்கும் வாவியை |
|
யெண்ணமொன் றின்றியே யிடத்திட் டேகினாற் |
|
றுண்ணெனச் சிலையவர் தொழுது காண்பவே |
|
(இ - ள்.) அண்ணல்மேல் அரிவையர் கண்ணின் மொய்த்து - அண்ணலாகிய நின்மேல் அரிவையர் கண்கள் மொய்க்குமாறு போல நெருங்கி; மண்ணின் மேல் மாந்தர்கள் அவண் மொய்க்கும் வாவியை - நிலவுலகிலுள்ள மக்கள் அவ்விடத்தை மொய்க்கும் அக் குளங்களை; இடத்து இட்டு எண்ணம் ஒன்று இன்றியே ஏகினால் - இடப்பக்கத்தே விட்டு அவற்றைக் கொள்ள வேண்டுமென்னும் நினைவு சிறிதும் இல்லாமலே போனால்; சிலையவர் துண் எனத் தொழுது காண்ப - அச் சிலைவர் துணுக்கென மொய்த்துத் தொழுது காண்பார்கள்.
|
(வி - ம்.) 'நல்வினையுடையோரெனத் தொழுது காண்பர்' என்பர் நச்சினார்க்கினியர். ஆகவே, அவ்வாவிகட்கு இடமே செல்க என்றான்.
|
( 41 ) |
1207 |
பாடல்வண் டியாழ்செயும் பசும்பொற் கிண்கிணித் |
|
தோடலர் கோதைமின் றுளும்பு மேகலை |
|
யாடிய கூத்தித னசைந்த சாயல்போன் |
|
றூடுபோக் கினியதங் கோரைங் காதமே |
|
(இ - ள்.) பாடல் வண்டு யாழ் செயும் அங்கு ஓர் ஐங்காதம் - பாடலையுடைய வண்டுகள் யாழென ஒலிக்கும் அவ்விடத்தே ஐங்காத வழியளவும்; பசும்பொன் கிண்கிணி - பசும்பொன்னாலான கிண்கிணியும்; தோடு அலர் கோதை - இதழ்விரிந்த மலர்க் கோதையும்; மின் துளும்பும் மேகலை - ஒளி ததும்பும் மேகலையும் உடைய; ஆடிய கூத்தி தன் அசைந்த சாயல்போல் - ஆடிய கூத்தியினுடைய இளைத்த தோற்றம் போல; ஊடுபோக்கு இனியது - இடையே செல்வதற்கு இயனிமையைத் தருவதாக இருக்கும்.
|
(வி - ம்.) அகப்பட்டார் நீங்குதல் அரிதாய் இருக்கும் என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 42 ) |
1208 |
கோதைவீழ்ந் ததுவென முல்லை கத்திகைப் |
|
போதுவேய்ந் தினமலர் பொழிந்து கற்புடை |
|
மாதரார் மனமெனக் கிடந்த செந்நெறி |
|
தாதின்மே னடந்ததோர் தன்மைத் தென்பவே |
|
(இ - ள்.) கோதை வீழ்ந்தது என முல்லை கத்திகைப்போது வேய்ந்து - (மற்றும்) மாலை வீழ்ந்தது என்னும்படி முல்லை
|