பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 709 

   என்று பொருள் கூறுவர். என்னை? அவர் உலகம் நிலையுடையது என்னும் கொள்கையுடையராகலான். இதனை ”மூவா முதலா உலகம்” என்ற தொடருக்கு (1) ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறும் உரையானும் உணர்க.

( 78 )
1244 உலக மூன்று முடையோய்நீ
   யொண்பொ னிஞ்சி யெயிலோய்நீ
திலக மாய திறலோய்நீ
  தேவரேத்தப் படுவோய்நீ
யலகை யில்லாக் குணக்கடலே
  யாரு மறியப் படாயாதி
கொலையி லாழி வலனுயர்த்த
   குளிர்முக் குடையி னிழலோய்நீ.

   (இ - ள்.) அலகை இல்லாக் குணக் கடலே! - அளவில்லாத பண்புறு கடலே!; உலகம் மூன்றும் உடையோய் நீ! - மூவுலகையும் உடையை நீ; ஒண்பொன் இஞ்சி எயிலோய் நீ! - சிறந்த பொன்னெயிலுடையை நீ! - திலகம் ஆய திறலோய் நீ! - சிறப்புடைய வரம்பிலா ஆற்றலுடையாய் நீ!; தேவர் ஏத்தப் படுவோய் நீ! - வானவரால் வாழ்த்தப்படுவோய் நீ!; கொலைஇல் ஆழி வலன் உயர்த்த - கொலை செய்யாத அறவாழியை வெற்றிக்காக எடுத்த; குளிர்முக்குடையின் நிழலோய் நீ! - தண்ணிய முக்குடை நீழலில் உள்ளாய் நீ!; ஆரும் அறியப்படாய் ஆதி - நீ எல்லோராலும் அறியப்படுவாய் ஆகின்றாய்.

   (வி - ம்.) முக்குடை : சீவக. 139 அடிக்குறிப்பை நோக்குக. படாய் செய்யாய் என்னுஞ் சொல் செய்யென் கிளவியாய் நின்றது. இவை மூன்றும் தேவபாணிக் கொச்சக ஒருபோகு எனப்படும். இவற்றால் இறைவனைப் பாடினான்.

( 79 )

வேறு

1245 அடியுலக மேதிதி யலர்மாரி தூவ
முடியுலக மூர்த்தி யுறநிமிர்ந்தோன் யாரே
முடியுலக மூர்த்தி யுறநிமிர்ந்தோன் மூன்று
கடிமதிலுங் கட்டழித்த காவலனீ யன்றே.

   (இ - ள்.) அடி உலகம் ஏத்தி அலர்மாரி தூவ - அடியை உலகம் போற்றி மலர்மழை பெய்ய; முடி உலகம் மூர்த்தி உற நிமிர்ந்தோன் யார்? - முடிந்த வுலகிலே இறைவனைக் காணும்படி முத்தியை அடைந்தவன் யாவன்!; முடி உலகம் மூர்த்தி உற நிமிர்ந்தோன் - மூன்று கடிமதிலும் கட்டழித்த காவலன்