பதுமையார் இலம்பகம் |
711 |
|
(வி - ம்.) பா : முற்கூறியவை. கந்தருவ மார்க்கத்தால் இடை மடங்கின. இச் செய்யுள் மூன்றும் சாரணரைப் பாடியவை. சாரணரென்பார் அக் காலத்துத் திருக்கோயிலுக்கு வந்திருந்த முனிவர் என்பர்.
|
( 82 ) |
வேறு
|
1248 |
அம்மலைச் சினகரம் வணங்கிப் பண்ணவர் |
|
பொன்மலர்ச் சேவடி புகழ்ந்த பின்னரே |
|
வெம்மலைத் தெய்வதம் விருந்து செய்தபின் |
|
செம்மல்போய்ப் பல்லவ தேய நண்ணினான். |
|
(இ - ள்.) அம்மலைச் சினகரம் வணங்கி - அரணபாதம் என்னும் அம் மலையிலுள்ள திருக்கோயிலை வணங்கி; பண்ணவர் பொன்மலர்ச் சேவடி புகழ்ந்த பின்னர் - ஆண்டுள்ள சாரணருடைய மலரனைய சிவந்த அடியைப் புகழ்ந்த பிறகு; வெம்மலைத் தெய்வதம் விருந்து செய்தபின் - மலைத்தெய்வமான இயக்கி விருந்தளித்த பின்னர்; செம்மல்போய்ப் பல்லவ தேயம் நண்ணினான் - சீவகன் சாரலூடே சென்று பல்லவ நாட்டை அடைந்தான்.
|
(வி - ம்.) அம்மலை என்றது அரணபாதம் என்னும் அம்மலையை அம்மலையை என்றவாறு. சினகரம் - அருகன்கோயில். பண்ணவர் - சாரணர். மலைத்தெய்வதம் - அம்மலையில் உறையும் இயக்கி. செம்மல் : சீவகன். தேயம் - நாடு.
|
( 83 ) |
1249 |
அரியலார்ந் தமர்த்தலி னனந்தர் நோக்குடைக் |
|
கரியவாய் நெடியகட் கடைசி மங்கையர் |
|
வரிவரால் பிறழ்வயற் குவளை கட்பவ |
|
ரிருவரை வினாய்நகர் நெறியின் முன்னினான். |
|
(இ - ள்.) அரியல் ஆர்ந்து அமர்த்தலின் - மதுவை உண்டு பொருதலின்; அனந்தர் நோக்கு உடை - மயங்கிய பார்வையுடைய; கரியவாய் நெடிய கண் கடைசி மங்கையர் - கொடிய வாயையும் நீண்ட கண்களையும் உடைய உழத்தியராகிய; வரிவரால் பிறழ்வயல் குவளை கட்பவர் இருவரை - வரியையுடைய வரால்கள் பிறழும் வயலிலே குவளையாகிய களையைப் பறிக்கும் இரு மங்கையரை; வினாய் நெறியின் நகர் முன்னினான் - வழிவினவி, அவ்வழியே சென்று பல்லவ நாட்டின் தலைநகரை நெருங்கினான்.
|
(வி - ம்.) இருவரையும் தனித்தனியே வினவினான் கூறிய வழி சரியா என்று தெரிந்துகொள்ள. குவளையல்லது களையில்லை என்க. கட்பவர் - களைபவர். வினாய் - வினவி; கேட்டு.
|
( 84 ) |