| பதுமையார் இலம்பகம் |
715 |
|
|
உருவம் நோக்கி - கூத்தின் ஒற்றுமையான வடிவைப் பார்த்து; வெண்ணெய் தீ உற்ற வண்ணம் ஆடவர் மெலிகின்றார் - வெண்ணெய் தீயிலே உற்றாற்போல ஆடவர்கள் மெலிகின்றனர்.
|
|
(வி - ம்.) தண்ணுமை - குடமுழவு. முழவம் - மத்தளம். குழல் - வேய்ங்குழல். குயிலுதல் - ஈண்டு இசைத்தல். தொட்டிமை - ஒற்றுமை.
|
( 90 ) |
| 1256 |
பாடலொ டியைந்த வாடல் பண்ணமை கருவி மூன்றுங் |
| |
கூடுபு சிவணி நின்று குழைந்திழைந் தமிர்த மூற |
| |
வோடரி நெடுங்க ணம்பா லுளங்கிழிந் துருவ வெய்யா |
| |
வீடமை பசும்பொற் சாந்த மிலயமா வாடு கின்றாள். |
|
|
(இ - ள்.) பாடலொடு இயைந்த ஆடல் பண் அமை கருவி மூன்றும் - பாட்டுடன் பொருந்திய ஆடலும் இசைபொருந்திய வாச்சியமும் ஆகிய இம் மூன்றும்; கூடுபு சிவணி நின்று குழைந்து இழைந்து அமிர்தம் ஊற - கூடிப் பொருந்தி நின்று மெல்கிக் கலந்து இனிமை மிக; ஓடு அரி நெடுங்கண் அம்பால் உளம் கிழிந்து உருவ எய்யா - பரவிய செவ்வரி யுடைய நீண்ட கண்ணாகிய அம்பினால் உள்ளம் பிளந்து உருவுமாறு எய்து; ஈடு அமை பசும் பொன் சாந்தம் இலயம்ஆ ஆடுகின்றாள் - இடுதல் அமைந்த பசும்பொன் போன்ற சாந்தம் அழிய ஆடுகின்றாள்.
|
|
(வி - ம்.) சாந்தம் என்பதைக் கூத்தாடுகின்றவள் பெயராக்கி அதற் கேற்பவும் உரைப்பார்கள். இலயம்ஆ - ஒன்றாக; அழிய. கூடுபு : வினையெச்சம். ஈடு : முதனிலை திரிந்த தொழிற் பெயர்.
|
( 91 ) |
| 1257 |
வாணுதற் பட்ட மின்ன வார்குழை திருவில் வீசப் |
| |
பூண்முலை பிறழப் பொற்றோ டிடவயி னுடங்க வொல்கி |
| |
மாணிழை வளைக்கை தம்மால் வட்டணை போக்கு கின்றாள் |
| |
காண்வரு குவளைக் கண்ணாற் காளைமே னோக்கி னாளே |
|
|
(இ - ள்.) மாண் இழை - சிறந்த அணிகலனுடையாள்; வாள் நுதல் பட்டம் மின்ன - ஒள்ளிய நெற்றியிலே பட்டம் ஒளிபெற; வார் குழை திருவில் வீச - நீண்ட குழைகள் வானவில்லென ஒளிர; பொன் தோடு இடவயின் நுடங்க - இடப்பக்கத்தே பொன் தோடு அசைய; பூண் முலை பிறழ - முலை மிசைப் பூண்கள் பிறழ; ஒல்கி - அசைந்து; வளைக்கை தம்மால் - வளையணிந்த கைகளால்; வட்டணை போக்குகின்றாள் - வர்த்தனை செய்கின்றவள்; காண் வரு குவளைக் கண்ணால் - பார்த்தற்குரிய குவளையனைய கண்களால்; காளைமேல் நோக்கினாள் - சீவகனைப் பார்த்தாள்.
|