| பதுமையார் இலம்பகம் |
716 |
|
|
(வி - ம்.) 'வர்த்தனை' 'வட்டணை' ஆயிற்று; தற்பவம். கைவட்டணையாவன : அப வேட்டிதம், உப வேட்டிதம், வியாவர்த்திதம், பரிவர்த்திதம்; இவை பிறைக்கையாம். 'தற்சனி முதலாப் பிடித்தல் அகம்வரின் - அத் தொழிலாகும் அப வேட்டிதமே' 'தற்சனி முதலாக விடுத்தல் அகம்வர - உய்த்தல் ஆகும் உப வேட்டிதமே' 'கனிட்ட முதலாப் பிடித்தல் அகம்வர - விடுத்தல் ஆகும் வியாவர்த்திதமே' 'கனிட்ட முதலா விடுத்தல் புறம் வரப் - படுத்தல் ஆகும் பரிவர்த் திதமே' 'ஆன்ற அபவேட் டிதமுப வேட்டிதம் - தோன்றும் வியாவர்த் திதத்தோடு மூன்றும் - பரிவர்த் திதமு மெனப்பகர்ந்தா ரித்தை - உரிமைப் பிறைக்கையா லூர்.'
|
( 92 ) |
| 1258 |
நோக்கினா ணெடுங்க ணென்னுங் |
| |
குடங்கையா னொண்டு கொண்டு |
| |
வாக்கமை யுருவின் மிக்கான் |
| |
வனப்பினைப் பருக விப்பா |
| |
லாக்கிய விலய நீங்கிற் |
| |
றணங்கனா ணெடுங்கண் பில்கி |
| |
வீக்குவார் முலையி னெற்றி |
| |
வெண்முத்தஞ் சொரிந்த வன்றே |
|
|
(இ - ள்.) நோக்கினாள் நெடுங்கண் என்னும் குடங்கையால் நொண்டு கொண்டு - பார்த்தவள் நீண்ட கண்களாகிய உள்ளங்கையாலே முகந்து கொண்டு; வாக்கு அமை உருவின் மிக்கான் வனப்பினைப் பருக - கவிகளாற் புகழ்தல் ஆகா வடிவிற் சிறந்தான் அழகினைப் பருகுதலாலே; இப்பால் ஆக்கிய இலயம் நீங்கிற்று - இவ்விடத்துக் கண் முதலியவற்றால் ஆக்கிய தாள அறுதிகள் நீங்கின; அணங்கனாள் நெடுங்கண் பில்கி - (மற்றும் இமையாமல் நோக்கியதனாற் கரித்து) தெய்வப் பெண் போன்ற அவளுடைய கண்கள் சிறு துவலையை வீசி; வார் வீக்கு முலையின் நெற்றி வெண்முத்தம் சொரிந்த - வாரினாற் கட்டப் பெற்ற முலை முகட்டிலே வெண் முத்தனைய நீர்த்துளியைச் சொரிந்தன.
|
|
(வி - ம்.) இது பெருமை பற்றிய மருட்கை யென்னும் மெய்ப்பாடு. (தொல். மெய்ப் - 7.) கண்கரித்த நீர் வீழ்தலின் அழுமையென்னும் மெய்ப்பாடாகாது.
|
( 93 ) |
| 1259 |
செருக்கய னெடுங்க ணாளத் |
| |
திருமகன் காண்ட லங்சி |
| |
நெருக்கித்தன் முலையின் மின்னு |
| |
நிழன்மணி வடத்தை மாதர் |
| |
பொருக்குநூல் பரிந்து சிந்தாப் |
| |
பூவெலாங் கரிந்து வாடத் |
| |
தரிக்கிலாள் காமச் செந்தீத் |
| |
தலைக்கொளச் சாம்பி னாளே |
|
|
(இ - ள்.) செரு கயல் நெடுங்கணாள் - பொருகின்ற கயலனைய நீண்ட கண்ணினாள்; அத் திருமகன் காண்டல் அஞ்சி -
|