பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 717 

அந்த அரசகுமரன் கண்ணீரைப் பார்த்தற்கு அஞ்சி; தன் முலையின் மின்னும் நிழல் மணிவடத்தை நெருங்கி - தன் முலைகளினாலே ஒளிவிடும் முத்து வடத்தை நெருக்கி; பொருக்கு நூல் பரிந்து சிந்தா - அக் கண்ணீருக்கு ஒப்பாக நூலை அறுத்து முத்துக்களைச் சிந்தி; மாதர் பூ எலாம் கரிந்து வாட - அம் மாதர் மலரெலாம் கரிந்து வாடும்படி; காமச் செந்தீ தரிக்கிலாள் - காமத்தீயைப் பொறுக்க இயலாதவளாய்; தலைக்கொளச் சாம்பினாள் - தலைக்கொண்டு வருந்தினாள்.

   (வி - ம்.) பொருவுக்கு : பொருக்கு : விகாரம். பொரு - ஒப்பு. மாதர்பூ - விரும்புதற்குக் காரணமான மலர்.

   செருக்கயல் நெடுங்கண் - ஒன்றனோடொன்று போர்புரியும் இணைக் கயல்மீனை ஒத்த நெடிய கண்கள். திருமகன் - உலோகபாலன், நிகழ் - ஒளி

( 94 )
1260 கன்னிமை கனிந்து முற்றிக்
  காமுறக் கமழுங் காமத்
தின்னறுங் கனியைத் துய்ப்பா
   னேந்தலே பிறர்க ளில்லை
பொன்னினா லுடையுங் கற்பென்
   றுரைத்தவர் பொய்யைச் சொன்னா
ரின்னிசை யிவற்க லாலென்
  னெஞ்சிட மில்லை யென்றாள்.

   (இ - ள்.) இன் இசை இவற்கு அலால் என் நெஞ்சு இடம் இல்லை - இனிய புகழையுடைய இவனுக்கன்றி என் உள்ளத்தில் இடம் இல்லை; கன்னிமை முற்றிக் கனிந்து காமுறக் கமழும் காமத்து - (ஆதலின்) கன்னித் தன்மையோடே முற்றிக் கனிந்து மணக்கும் காமமாகிய; இன் நறுங் கனியைத் துய்ப்பான் ஏந்தலே - இனிய பழத்தை நுகர்கின்றவன் இவ் வேந்தலே; பிறர்கள் இல்லை - வேறு இதற்கு உரியார் இல்லை; பொன்னினால் கற்பு உடையும் என்று உரைத்தவர் பொய்யைச் சொன்னார் - பொருளாற் கற்பு அழியும் என்று மொழிந்தவர் பொய்யைப் புகன்றனர்; என்றாள் - என்று நினைத்தாள்.

   (வி - ம்.) கன்னிமை - கன்னித்தன்மை. கனிதல் - முதிர்தல். ஏந்தலே - சீவகனே. 'பத்துப் பொன்னுக்குமேற் பதிவிரதை இல்லை' என்பது ஒரு பழமொழி. இவற்கு - இச்சீவகனுக்கு.

( 95 )
1261 கருஞ்சிறைப் பறவை யூர்திக்
  காமரு காளை தான்கொ
லிருஞ்சுற வுயர்த்த தோன்ற
   லேத்தருங் குருசி றான்கொ
லரும்பெறற் குமர னென்றாங்
   கறிவயர் வுற்று நின்றா
டிருந்திழை யணங்கு மென்றோட்
  டேசிகப் பாவை யன்னாள்