| பதுமையார் இலம்பகம் |
718 |
|
|
(இ - ள்.) திருந்து இழை அணங்குமென் தோள் தேசிகப் பாவை அன்னாள் - செவ்விய அணிபுனைந்த அணங்கனையாளாகிய தேசிகப் பாவையாகிய அத்தகையினாள்; அரும் பெறற் குமரன் - அருமையாகக் கிடைத்த இக்குமரன்; கருஞ் சிறைப் பறவை ஊர்திக் காமரு காளை கொல்!- பெரிய சிறகுடைய மயில் ஊர்தியாகிய விருப்பூட்டும் முருக வேளோ?; இருஞ் சுறவு உயர்த்த தோன்றல் ஏத்தருங் குருசில் கொல்? - பெரிய சுறாமீனைக் கொடியில் ஏந்திய தோன்றலாகிய புகழற்கரிய காமனோ?; என்று ஆங்கு அறிவு அயர்வுற்று நின்றாள் - என்றெண்ணி அறிவு வருத்தமுற்று நின்றாள்.
|
|
(வி - ம்.) தேசிகப் பாவை : அவள் பெயர். அன்னாள் என்பது அவளுடைய கல்வி முதலியவற்றைச் சுட்டி நின்றது. 'பாவை யொப்பாள்' என்று பாடமாயின் இவளுக்கு உவமை கூறியதாகும்; பெயராகாது.
|
( 96 ) |
| 1262 |
போதெனக் கிடந்த வாட்கண் |
| |
புடைபெயர்ந் திமைத்தல் செல்லா |
| |
தியாதிவள் கண்ட தென்றாங் |
| |
கரசனு மமர்ந்து நோக்கி |
| |
மீதுவண் டரற்றுங் கண்ணி |
| |
விடலையைத் தானுங் கண்டான் |
| |
காதலிற் களித்த துள்ளங் |
| |
காளையைக் கொணர்மி னென்றான். |
|
|
(இ - ள்.) போது எனக் கிடந்த வாள்கண் புடை பெயர்ந்து இமைத்தல் செல்லாது - மலர் என அமைந்த ஒளிமிகு கண் பிறழ்ந்து இமைத்தல் இல்லை; இவள் கண்டது யாது என்று - இவள் பார்த்தது எது என்றெண்ணி; ஆங்கு அரசனும் அமர்ந்து நோக்கி - அவள் நோக்கின இடத்தே அரசகுமரனும் பொருந்திப் பார்த்து; மீது வண்டு அரற்றும் கண்ணி விடலையைத் தானும் கண்டான் - மேலே வண்டுகள் முரலும் கண்ணியணிந்த சீவகனை அவனும் பார்த்தான்; உள்ளம் காதலில் களித்தது - அப்போது அவன் மனம் விருப்பத்தாலே மகிழ்ந்தது; காளையைக் கொணர்மின் என்றான் - (உடனே) அக் குமரனை இங்கே கொண்டு வருக என்று பணியாட்களைப் பணித்தான்.
|
|
(வி - ம்.) போது - பூ; ஈண்டுத் தாமரைப்பூ என்க. குவளைப்பூ என்னினும் பொருந்தும். இவள் - இக்கூத்தி. அரசன் : உலோகபாலன். அமர்ந்து - பொருந்தி. விடலை : சீவகன். காளையை - சீவகனை. இமைத்தல் செல்லாது இவள் கண்டது யாது என்று ஆய்ந்து அரசனும் அமர்ந்து நோக்கி விடலையைத் தானும் கண்டான் என வினை முடிவு செய்க. கண்ணி - மாலை. விடலை : இளைஞன். கண்ணியை யணிந்தவிடலை என்க.
|
( 97 ) |