| பதுமையார் இலம்பகம் |
730 |
|
|
(இ - ள்.) கொங்கு அலர் கோங்கின் நெற்றிக் குவிமுகிழ் முகட்டின் அங்கண் - மணம் பரவும் கோங்கின் உச்சியிலே குவிந்த அரும்பின் முகட்டிலே; தேன் தங்கு அரவயாழின் தான் இருந்து ஆந்தை பாடும் - தேன்போல இனிமை பொருந்திய ஒலியையுடைய யாழினைப்போல ஆந்தை அமர்ந்து பாடும்; நரபதி! நீயும் கேண்மோ - அரசனே! நீயும் கேட்பாயாக; இங்கு நம் இடரைத் தீர்ப்பான் இளையவன் உளன் - (இந் நிமித்தத்தை நோக்கின்) இங்கே நம் துன்பத்தை நீக்கும் இளைஞன் ஒருவன் இருக்கிறான்; இன்று நங்கைக்கு இறத்தல் இல்லை - இற்றை நாளில் பதுமைக்கு இறப்புக் கிடையாது.
|
|
(வி - ம்.) 'மிதுன ராசியிலே தேன் அரவம் தங்கும் கொங்கு அலர் கோங்கின் நெற்றியில் அரும்பின் தலையில் ஆந்தை இருந்து பாடும்' என்பர் நச்சினார்க்கினியர். யாழ் - மிதுனராசி.
|
( 116 ) |
| 1282 |
பன்மணிக் கடகஞ் சிந்தப் |
| |
பருப்புடைப் பவளத் தூண்மேன் |
| |
மன்னவன் சிறுவன் வண்கை |
| |
புடைத்துமா ழாந்து சொன்னா |
| |
னின்னுமொன் றுண்டு சூழ்ச்சி |
| |
யென்னொடங் கிருந்த நம்பி |
| |
தன்னைக்கூய்க் கொணர்மி னென்றான் |
| |
றரவந்தாங் கவனுங் கண்டான். |
|
|
(இ - ள்.) பல்மணிக் கடகம் சிந்தப் பருப்பு உடைப்பவளத் தூண்மேல் - பல மணிகள் இழைத்த கடகம் சிந்தும்படி பருமையுடைய பவளத் தூணின்மேல்; மன்னவன் சிறுவன் வண்கை புடைத்து மாழாந்து சொன்னான் - அரசகுமரன் தன் வளமிகு கையினை மோதி மயங்கி ஒருமொழி யுரைத்தான்; இன்னும் சூழ்ச்சி ஒன்று உண்டு - இன்னும் ஒரு சூழ்ச்சியுள்ளது; என்னொடு அங்கு இருந்த நம்பி தன்னை - என்னுடன் நாடக அரங்கிலே இருந்த நம்பியை; கூய்க் கொணர்மின் என்றான் - கூவி அழைமின் என்றான்; தர அவனும் வந்து ஆங்குக் கண்டான் - அழைக்க, அவனும் வந்து அந் நிலையைக் கண்டான்.
|
|
(வி - ம்.) மந்திரங்கூறுவோர் மருத்துவர் முதலியோர்பால் தனக் குண்டான சினத்தால் உலோகபாலன் தூணைப் புடைத்தான் என்பது கருத்து. பருப்பு - பருமை. மாழாந்து - கையறவானே மயங்கி என்க. சூழ்ச்சி இன்னும் ஒன்றுண்டு என மாறுக. சூழ்ச்சி - ஈண்டு நஞ்சினை அகற்றும் உபாயம்.
|
( 117 ) |