பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 733 

எதிர்ப்படும் காலம், தனக்குப் பிறர் செய்த பிழையைக் கருதுதல் என்று; எட்டின் ஆகும் - எட்டுக் காரணத்தானே கடித்தல் உளதாகும்; உம்பர் தட்டம் அதட்டம் ஆம் பிளிற்றின் உயிர் பிழிந்து உண்ணும் - மேல்வாயிலே தட்டம் அதட்டம் என்னும் எயிறுகளில் உண்டான நஞ்சைக் கடித்த வாயிலே பெய்யுமாயின் உயிரைப் பிழிந்து உண்ணும்; ஒழிந்த எயிறு ஊனம் செய்யும் - மற்றை எயிறுகளிலுண்டான நஞ்சைக் கடித்த வாயிலே காலுமாயின் வருத்தம் உண்டாக்கும்; கோள் என மற்றும் சொன்னான் - அறிந்து கொள்ள வேண்டியவை என மேலும் அதனிலக் கணஞ் சில கூறினான்.

   (வி - ம்.) உகுத்தல் : தன்னாற் பொறுத்தல் அருமையினால், ஒன்றைக் கௌவி நஞ்சை உமிழ்தல். போகம் - பிணையுடன் இழைதல்; தட்டம் - மேல்வாய்ப்பல்; அதட்டம் - கீழ்வாய்ப்பல். கொள்ளுதல் : கோளென விகாரம். காலம் ஒழிந்த ஏழும் அகாலமாம்.

( 121 )
 

   (இ - ள்.) யாம் தந்து உரைப்பின் - நாம் சித்தராரூடம் என்னும் நூலினை ஆராய்ந்துரைத்தால்; ஆன்பால் அவியினை நாறும் அந்தணன் - ஆவின்பாலினாற் செய்த சோறுபோல நாறுமாயின் அப் பாம்பு அந்தணன்பாலதாகும்; அலர்ந்த காலை நந்தியா வட்டம் நாறுமாயின் நகைமுடி அரசன் - அலர்ந்த காலத்தில் நந்தியாவட்டத்தைப்போல நாறுமாயின், அஃது ஒளி முடி அரசன்பாலதாகும்; தாழைநாறும் தடமலர் வணிகன் - தாழை மலர்போல நாறுமாயின் அஃது பெருமலரணிந்த வணிகன்பாலதாகும்; பந்தியாப் பழுப்பு நாறின் சூத்திரன் பாலது என்றான் - மற்றொன்றுங் கூடாத அரிதாரம்போல நாறுமாயின் சூத்திரன்பாலது என்றான்.

   (வி - ம்.) ஆன்பால் போன்று மணமுடைய பாம்பு பார்ப்பனப் பாம்பு; நந்தியாவட்ட மலர்மணக்கும் பாம்பு அரசப்பாம்பு, தாழை மலர் மணக்கும் பாம்பு வணிகப்பாம்பு, அரிதாரம் மணக்கும் பாம்பு சூத்திரப் பாம்பு என்றான் என்க.

( 122 )