| பதுமையார் இலம்பகம் |
738 |
|
|
தன் வாள்தடம் கண்களால் - காதலையுடைய தன் வாளனைய பெரிய கண்களாலே; உற்ற நோக்கம் உறாதது ஓர் நோக்கினில் - தான் அவன்பாற் கொண்ட அன்புற்ற நோக்கத்தை மற்றவர் ஐயுறாத ஒரு நோக்கத்தினாலே; வள்ளலைச் சுற்றிச் சோர்வு இன்றி யாத்திட்டாள் - சீவகனைச் சூழ்ந்து தப்பாமற் கட்டினாள்.
|
|
(வி - ம்.) அற்றமில் அமிர்து - ஒருவன் கைப்படா அமிழ்தம். உறாதநோக்கு, ஏதின்மைபட நோக்கும் நோக்கமுமாம். அந்நோக்கத்தால் அவன் கட்டுண்டலால் யாத்திட்டாள் என்றார். மாதர் - காதல்.
|
( 130 ) |
வேறு
|
| 1296 |
விஞ்சையர் வீர னென்பார் |
| |
விண்ணவர் குமர னென்பா |
| |
ரெஞ்சிய வுயிரை மீட்டா |
| |
னிவனலா லில்லை யென்பார் |
| |
மஞ்சுசூ ழிஞ்சி மூதூர் |
| |
மாமுடிக் குரிசி னாளை |
| |
நஞ்சுசூழ் வேலி னாற்கே |
| |
நங்கையைக் கொடுக்கு மென்பார். |
|
|
(இ - ள்.) விஞ்சையர் வீரன் என்பார் - (இவன்) வித்தியாதர வீரன் என்பார்; விண்ணவர் குமரன் என்பார் - வானவர் மகன் என்பார்; எஞ்சிய உயிரை மீட்டான் இவன் அலால் இல்லை என்பார் - போன உயிரைத் திரும்பக் கொணர்ந்தவன் இவனல்லது வேறொருவன் இல்லை என்பார்; மஞ்சுசூழ் இஞ்சி மூதூர் மாமுடிக் குரிசில் - முகில் தவழும் மதிலையுடைய இப்பழம்பதியின் முடிமன்னன்; நஞ்சுசூழ் வேலினாற்கே நாளை நங்கையைக் கொடுக்கும் என்பார் - இந்த நஞ்சு கலந்த வேலினானுக்கே நாளைக்கு இந்த நங்கையை நல்குவான் என்பார்.
|
|
(வி - ம்.) விஞ்சையர் - வித்தியாதரர். எஞ்சிய - இறந்த. மஞ்சு - முகில். இஞ்சி - மதில். மூதூர் - பழைமையான ஊர், சந்திராபம்.
|
( 131 ) |
| 1297 |
விளங்கொளி விசும்பில் வெண்கோட் |
| |
டிளம்பிறை சூழ்ந்த மின்போல் |
| |
வளங்கெழு வடத்தைச் சூழ்ந்து |
| |
வான்பொனாண் டிளைப்பச் சேந்த |
| |
விளங்கதிர் முலைக டம்மா |
| |
லிவனைமார் பெழுதி வைகிற் |
| |
றுளங்குபெண் பிறப்புந் தோழி |
| |
யினிதெனச் சொல்லி நிற்பார். |
|