| பதுமையார் இலம்பகம் | 
739  | 
  | 
| 
    (இ - ள்.) தோழி! - தோழியே!; விளங்கு ஒளி விசும்பில் - விளங்கும் ஒளியையுடைய வானிலே; வெண்கோட்டு இளம்பிறை சூழ்ந்த மின்போல் - வெண்மையான நுனிகளையுடைய இளம்பிறையைச் சூழ்ந்த மின்கொடிபோல; வளம்கெழு வடத்தைச் சூழ்ந்து வான்பொன் நாண் திளைப்பச் சேந்த - வளம் பொருந்திய முத்து வடத்தைச் சூழ்ந்து பொன்நாண் அசைதலாலே சிவந்த; இளங்கதிர் முலைகள் தம்மால் - இளமை பொருந்திய ஒளியுறு முலைகளாலே; இவனை மார்பு எழுதி வைகின் - இவன் மார்பை எழுதி வாழப் பெறின்; துளங்கு பெண் பிறப்பும் இனிது எனச் சொல்லி நிற்பார் - நிலையற்ற பெண்பிறப்பும் இனிமையுடையதாம் என்று சொல்லி நிற்பார். 
 | 
| 
    (வி - ம்.) நச்சினார்க்கினியர், ”முன்பு சீவகன், 'என் கொடிது' (1283) என்றதனால், இவர்கள், 'மார்பெழுதி வைகின் இனிது என்றார்” என்பர். 
 | 
( 132 ) | 
|  1298 | 
அருந்தவஞ் செய்து வந்த |  
|   | 
   வாயிழை மகளிர் யார்கொல் |  
|   | 
பெருந்தகை மார்பிற் றுஞ்சிப் |  
|   | 
   பெண்மையாற் பிணிக்கு நீரார் |  
|   | 
கருங்கணின் யாமுங் கண்டாங் |  
|   | 
   காமனை யென்று சொல்லித் |  
|   | 
திருந்தொளி முறுவற் செவ்வாய்த் |  
|   | 
   தீஞ்சொலார் மயங்கி னாரே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) பெருந்தகை மார்பில் துஞ்சிப் பெண்மையால் பிணிக்கும் நீரார் - இப் பெருந்தகையின மார்பிலே துயின்று பெண்மையால் வசப்படுத்தும் இயல்பினாராக; அருந்தவம் செய்து வந்த ஆயிழை மகளிர் யார்கொல்? - அரிய தவம் இழைத்து வந்த அணிகலன் அணிந்த பெண்டிர் யாவரோ?; காமனை யாமுங் கருங்கணின் கண்டாம் என்று சொல்லி - காமனை நாமும் நம் கரிய கண்களாற் காண்பது மட்டும் செய்தோம் என்றுரைத்து; திருந்து ஒளி முறுவல் செவ்வாய்த் தீசொலார் மயங்கினார் - விளங்கும் ஒளியை உடைய முறுவலையுஞ் செவ்வாயையுமுடைய இனிய மொழி மகளிர் மயக்குற்றனர். 
 | 
| 
    (வி - ம்.) ஆயிழை - ஆராய்ந்த அணிகலன் அணிந்த. கொல் : ஐயப் பொருட்டு, பெருந்தகை, அன்மொழி : சீவகன்,. துஞ்சுதல் - துயிலுதல். நீரார் - தன்மையுடையோர். காமன் உருவமற்றவன் என்ப; அவர் கூற்றுப் பொய் யாமும் அவனைக் கண்ணிற் கண்டாம் என்றவாறு. திருந்து - திருத்தமான. முறுவல் - பற்கள் திருத்தமான ஒளியுடைய பற்கள் எனக் கொள்வதும் ஒன்று. 
 | 
( 133 ) |