| பதுமையார் இலம்பகம் |
741 |
|
|
(வி - ம்.) ஏற்பத்தாங்கி - பொருந்தும்படி அணிந்து. கொட்டை - குமிழ். மரவடி - மரத்தாற் செய்த அடிக்காப்பு. பொற்கலம் - ஈண்டு உண்கலம்.
|
( 135 ) |
| 1301 |
கன்னியர் கரக நீராற் றாமரை கழீஇய தொப்பப் |
| |
பொன்னடி கழீஇய பின்றைப் புரிந்துவாய் நன்கு பூசி |
| |
யின்மலர்த் தவிசி னுச்சி யிருந்தமிர் தினிதிற் கொண்டான் |
| |
மின்விரிந் திலங்கு பைம்பூண் வேற்கணார் வேனிலானே. |
|
|
(இ - ள்.) கன்னியர் கரக நீரால் தாமரை கழீஇயது ஒப்பப் பொன் அடி கழீஇய பின்றை - கன்னிப் பெண்கள் கரகத்திலிருந்த நீராலே தாமரை மலரைக் கழுவியது போலப் பொன் போன்ற அடிகளைக் கழுவிய பிறகு; புரிந்து நன்கு வாய் பூசி - விரும்பி நன்றாக வாய் கழுவி; இன் மலர்த் தவிசின் உச்சி இருந்து - இனிய மலர்த் தவிசின்மீது அமர்ந்து; மின் விரிந்து இலங்கு பைம்பூண் வேல்கணார் வேனிலான் - ஒளி மலர்ந்து விளங்கும் பைண்பூம் அணிந்த வேலனைய கண்ணார்க்குக் காமனைப் போன்ற சீவகன்; அமிர்து இனிதின் கொண்டான் - உணவை இனிய கறியுடன் உண்டான்.
|
|
(வி - ம்.) 'நீராடிக் கால்கழுவி வாய்பூசி' (19) என்றும், 'கைப்பன எல்லாம் கடை தலை தித்திப்ப' (26) என்றும் ஆசாரக் கோவையிற் கூறினார்.
|
( 136 ) |
| 1302 |
வாசநற் பொடியு நீருங் காட்டிடக் கொண்டு வாய்ப்பப் |
| |
பூசறுத் தங்கை நீரை மும்முறை குடித்து முக்காற் |
| |
காசறக் துடைத்த பின்றைக் கைவிர லுறுப்புத் தீட்டி |
| |
தூசினா லங்கை நீவி யிருந்தனன் றோற்ற மிக்கான். |
|
|
(இ - ள்.) வாசம் நல் பொடியும் நீரும் காட்டிட - மணம் உறு நல்ல பொடியையும் நீரையும் மகளிர் ஏந்த; கொண்டு வாய்ப்பப் பூசு அறுத்து - அவற்றைக் கைக்கொண்டு பூசுந்தொழிலை முடித்து; அங்கை நீரை மும்முறை குடித்து - அங்கையில் ஏந்திய நீரை மூன்று முறை குடித்து; முக்கால் காசு அறத்துடைத்த பின்றை - மும்முறை குற்றம் நீங்கத் துடைத்த பிறகு; கைவிரல் உறுப்பின் தீட்டி - விரலைக் கண் முதலிய உறுப்புக்களிலே தீண்டுவித்து; தூசினால் அங்கை நீவி - மேல் ஆடையினால் அங்கையைத் துடைத்து; தோற்றம் மிக்கான் இருந்தனன் - சிறந்த தோற்றத்துடன் இருந்தான்.
|
|
(வி - ம்.) 'முக்காற் குடித்துத் துடைத்து முகத்துறுப்பு - ஒத்த வகையால் விரல் உறுத்தி வாய் பூசல்' (ஆசாரக் - 28) என்றார் பிறரும்
|
( 137 ) |