| பதுமையார் இலம்பகம் |
742 |
|
| 1303 |
சீர்கொளச் செய்த செம்பொ |
| |
னடைப்பையுட் பாகு செல்ல |
| |
வார்கழல் குருசிற் கொண்டு |
| |
கவுளடுத் திருந்த வாங்கட் |
| |
போர்கொள்வேன் மன்ன னெல்லாக் |
| |
கலைகளும் புகன்று கேட்டு |
| |
நீர்கொண்மாக் கடல னாற்கு |
| |
நிகரில்லை நிலத்தி லென்றான் |
|
|
(இ - ள்.) சீர் கொளச் செய்த செம்பொன் அடைப்பையுள் பாகு செல்ல - சிறப்புக் கொள்ளச் செய்த பொன் அடைப்பையிலே பாக்கும் வெற்றிலையும் செல்ல; வார் கழல் குரிசில் கொண்டு கவுள் அடுத்து இருந்த ஆங்கண் - கட்டப்பட்ட கழலணிந்த சீவகன் அவற்றை யெடுத்து வாயிலிட்டுத் தின்றிருந்த அளவிலே; போர் கொள் வேல் மன்னன் எல்லாக் கலைகளும் புகன்று கேட்டு - போருக்குக் கொண்ட வேலேந்திய தனபதி மன்னன் சீவகன் கற்ற கலைகளையெல்லாம் விரும்பிக் கேட்டு; நீர்கொள்மாக் கடலன்னாற்கு நிகர் நிலத்தில் இல்லை என்றான் - நீர் கொண்ட பெரிய கடலன்ன கலையுடைய இவனுக்கு ஒப்பு இந்நிலவுலகில் இல்லை என்றான்.
|
|
(வி - ம்.) அடைப்பை - வெற்றிலையிட்டுவைக்கும் பை. பாகு - பாக்கு. குரிசில் : சீவகன். கவுள் - கன்னம் புகன்று - விரும்பி. பல திசைகளினும் இருந்து வரும் பல்வேறு யாறுகளும் கொணரும் நீரும் மேனீரும் கீழ் நீருமாகிய நீரெல்லாம் புகுந்து நிறைந்திருத்தலான், பல்வேறு கலைகளும் நிரம்பிய சீவகனை நீர்கொள் மாக்கடல் அன்னான் என்றார்.
|
( 138 ) |
வேறு
|
| 1304 |
பரிதி பட்டது பன்மணி நீள்விளக் |
| |
கெரிய விட்டன ரின்னிய மார்த்தன |
| |
வரிய பொங்கணை யம்மெ னமளிமேற் |
| |
குரிசி லேறினன் கூர்ந்தது சிந்தையே. |
|
|
(இ - ள்.) பரிதி பட்டது - (அப்போது) ஞாயிறு மறைந்தது; பல் மணி நீள விளக்கு எரிய விட்டனர் - பல மணிகளையும் விளக்கையும் ஒளிபெற ஏற்றினர்; இன் இயம் ஆர்த்தன - இனிய இசைக்கருவிகளும் ஒலித்தன; அரிய பொங்கு அணை அம் மென் அமளிமேற் குரிசில் ஏறினன் - தனித்தார்க்குப் பொறுத்தற்கரிய பொங்கும் அணையாகிய அழகிய மென்மையான படுக்கையின்மேற் சீவகன் அமர்ந்தனன்; சீந்தை கூர்ந்தது - (அப்போது) அவன் உள்ளம் காம நினைவிலே மிகுந்தது.
|