பதுமையார் இலம்பகம் |
744 |
|
(இ - ள்.) புகை அவாவிய பூந்துகில் ஏந்து அல்குல் - நறுமணப் புகை பொருந்திய அழகிய ஆடையும், அந்த ஆடைதாங்கிய அல்குலிலே; வகையவாம் மணிமேகலை - பலவகையான மணிகள் செறிந்த மேகலையும்; வார் மது முகை அவாவிய மொய் குழல் - வழியுந் தேனையுடைய அரும்புகள் அவாவிய செறிந்த குழலும்; பாவியேன் பகையவாய் - பாவியேனுக்குப் பகையாயினவாய்; படர்நோய் பயக்கின்ற - துன்பமாகிய நோயைச் செய்கின்றன.
|
(வி - ம்.) குழலை அவட்குப் பெயராக்கிக் குழலையுடையாளது அல்குலை மறைத்தமையால் ஆடையும் மேகலையும் பகையாயின என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 142 ) |
1308 |
போது லாஞ்சிலை யோபொரு வேற்கணோ |
|
மாது லாமொழி யோமட நோக்கமோ |
|
யாது நானறி யேனணங் கன்னவள் |
|
காத லாற்கடை கின்றது காமமே. |
|
(இ - ள்.) அணங்கு அன்னவள் - தெய்வப்பெண் போன்றவளின்; போது உலாம் சிலையோ? - காமன் அம்பாகிய மலர் உலாவும் வில்லோ?; பொரு வேல் கணோ? - பொருதற்குரிய வேலாகிய கண்ணோ?; மாது உலாம் மொழியோ? - காதல் உலாவும் சொல்லோ?; மடநோக்கமோ? - இளமை பொருந்திய பார்வையோ?; காதலால் கடைகின்றது காமம் - காதலினாற் காமத்தை மிகச் செய்கின்றது; யாது நான் அறியேன் - இவற்றில் இன்னதென்று யான் சிறிதும் அறிகிலேன்.
|
(வி - ம்.) சிலை : காமன் வில் : புருவம். இதனால் உறுப்புக்கள் யாவும் ஒக்க வருத்தின என்றானாயிற்று. 'மொழியோ?' என்றதனால் மொழியுங் கேட்டான் என்பது பெற்றாம். அன்றி, அடிகளுக் கிறைஞ்சி' (சீவக. 1275) என்னும் கவியிற் கூற்றைத் தானும் பின்பு கேட்டலின், 'மொழியோ' என்றான் என்றலும் ஒன்று.
|
( 143 ) |
1309 |
அண்ண லவ்வழி யாழ்துயர் நோயுற |
|
வண்ண மாமலர்க் கோதையு மவ்வழி |
|
வெண்ணெய் வெங்கனன் மீமிசை வைத்ததொத் |
|
துண்ணை யாவுரு காவுள ளாயினாள். |
|
(இ - ள்.) அண்ணல் அவ்வழி ஆழ்துயர் நோய் உற - சீவகன் அங்கே அவ்வாறு ஆழுந் துயர் தரும் நோயை அடைய; வண்ணம் மாமலர்க் கோதையும் - அழகிய பெரிய மலர்க் கோதையாளும்; அவ்வழி - அங்கே; வெண்ணெய் வெங்கனல் மீமிசை வைத்தது ஒத்து - வெண்ணெயைக் கொடிய நெருப்பின் மேலே வைத்தாற்
|