| பதுமையார் இலம்பகம் |
745 |
|
|
போன்று; உள் நையா உருகா உளள் ஆயினாள் - உள்ளம் நைந்து உருகி உயிருடன் இருப்பாளாயினாள்.
|
|
(வி - ம்.) அவனைக் காணலாம் என்னும் நினைவால், 'உளள் ஆயினாள்,, ஆழ்துயர் நோய் - அழுந்துதல் உறுகின்ற வருத்த நோய்.
|
( 144 ) |
| 1310 |
பெயன்ம ழைப்பிற ழுங்கொடி மின்னிடைக் |
| |
கயன்ம ணிக்கணி னல்லவர் கைதொழப் |
| |
பயனி ழைத்தமென் பள்ளியுட் பைந்தொடி |
| |
மயனி ழைத்தவம் பாவையின் வைகினாள் |
|
|
(இ - ள்.) பெயல் மழைப் பிறழும் கொடி மின் இடை - பெய்தலை யுடைய முகிலிலே பிறழும், ஒழுங்கற்ற மின் போன்ற இடையும்; கயல் மணிக் கணின் - கயலனைய நீலமணிக் கண்களையும் உடைய; நல்லவர் கை தொழ - மகளிர் கைகுவித்து வணங்க; பயன் இழைத்த மென்பள்ளியுள் - துணையுடையோர்க்குப் பயன் உண்டாகப் பண்ணின மென்மையான படுக்கையிலே; மயன் இழைத்த அம் பாவையின் - மயன் பண்ணின அழகிய பதுமை போல; பைந் தொடி வைகினாள் - பசிய வளையலுடைய பதுமை இருந்தனள்.
|
|
(வி - ம்.) மழை : ஆகுபெயர்; முகில். கணின் - கண்ணின். நல்லவர் - மகளிர்; பள்ளி - படுக்கை. மயன் - அசுரத்தச்சன். அம்பாவை : அழகிய பதுமை
|
( 145 ) |
| 1311 |
வணங்கு நோன்சிலை வார்கணைக் காமனோ |
| |
மணங்கொள் பூமிசை மைவரை மைந்தனோ |
| |
நிணந்தெ னெஞ்ச நிறைகொண்ட கள்வனை |
| |
யணங்கு காளறி யேனுரை யீர்களே. |
|
|
(இ - ள்.) அணங்குகாள்! - தெய்வங்களே!; என் நெஞ்சம் நிணந்து நிறை கொண்ட கள்வனை - என் உள்ளத்தைப் பிணித்து நிறையைக் கவர்ந்த அக் கள்வனை; வணங்கும் நோன் சிலைவார்கணைக் காமனோ? - எல்லோரும் மனங் குழைதற்குக் காரணமான வலிய வில்லையும் நீண்ட அம்புகளையும் உடைய காமனோ?; மணம் கொள் பூமிசை மைவரை மைந்தனோ? - மணமுறும் மலரிலே தோன்றிய, கரிய மலைவாழ் வுறும் முருகனோ?; அறியேன் உரையீர்களே ?- அறிந்திலேன், நீயிர் அறிந்தால் உரையீரோ?
|
|
(வி - ம்.) ஏ : வினா விடைச்சொல். பெரும்பாலும் தெய்வத் தன்மை உடைமையின் மகனோ என்றிலளாம்!
|
|
வணங்கு நோன்சிலை - எல்லாவுயிர்களுக்கும் மனம் குழைதற்குக் காரணமான வலிய கருப்புவில் என்க. கணை - மலரம்பு. பூமிசை -
|