| பதுமையார் இலம்பகம் | 
748  | 
  | 
| 
    (இ - ள்.) மாதியாழ் மழலைமொழி மாதராள் - காதலையுடைய யாழின் இசை போலும் மழலை மொழியுறு பதுமையின்; தாதி அவ்வையும் தன் அமர் தோழியும் - தாதியாகிய செவிலியும் அவள் விரும்பிய தோழியும்; போதுவேய் குழல்பொன் அவிர் சாயலுக்கு - மலர் வேய்ந்த குழலையுடைய, பொன்னென ஓளிரும் சாயலுடையாட்கு; நாம் செயற்பாலது யாது என்று எண்ணினார் - நாம் செய்தற்குறியது யாது என்று ஆராய்ந்தனர். 
 | 
| 
    (வி - ம்.) மாது - காதல். மழலைம்மொழி என்புழி மகரம் வண்ணநோக்கி விரிந்தது. மாதராள் : பதுமை. தாதியவ்வை - தாதியாகிய செவிலித்தாய். அமர்தோழி : வினைத்தொகை. வேய்குழல் : வினைத்தொகை. பொன்னவிர் சாயல்: இஃது அன்மொழியாய்ச் சாயலையுடையாளை யுணர்த்தியது. 
 | 
( 151 ) | 
|  1317 | 
அழுது நுண்ணிடை நைய வலர்முலை |  
|   | 
முழுதுங் குங்கும முத்தொ டணிந்தபின் |  
|   | 
றொழுது கோதையுங் கண்ணியுஞ் சூட்டினா |  
|   | 
ரெழுது கொம்பனை யாரிளை யாளையே | 
 
 
 | 
| 
    (இ - ள்.) எழுது கொம்பு அளையார் இளையாளை தொழுது - எழுதும் மலர்க்கொடி போன்றவர்கள் பதுமையை வணங்கி; நுண்இடை அழுது நைய - அவளுடைய நுண்ணிய இடை அழுது வருந்துமாறு; அலர்முலை முழுதும் குங்குமம் முத்தொடு அணிந்த பின் - அலர்ந்த முலை முழுதும் குங்குமத்தைப் பூசி முத்தை அணிந்த பிறகு; கோதையும் கண்ணியம் சூட்டினார் - மலர்மாலையும் மலர்க்கண்ணியும் அணிந்தனர். 
 | 
| 
    (வி - ம்.) சுமை பொறுக்கலாற்றாமல் நுண்ணிடை அழுது நைந்தது. தன்மைபெற இவற்றை அணிந்தனர். 
 | 
( 152 ) | 
|  1318 | 
வேந்து காயினும் வெள்வளை யாயமோ |  
|   | 
டேந்து பூம்பொழி லெய்தியங் காடுத |  
|   | 
லாய்ந்த தென்றுகொண் டம்மயில் போற் குழீஇப் |  
|   | 
போந்த தாயம் பொழிலும் பொலிந்ததே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) வேந்து காயினும் - அரசன் சினந்தாலும்; வெள்வளை ஆயமொடு - வெள்ளிய வளையணிந்த தோழியருடன்; ஏந்து பூம்பொழில் எய்தி - உயர்ந்த மலர்ப்பொழிலை அடைந்து; அங்கு ஆடுதல் ஆய்ந்தது - அங்கே விளையாடுதல் ஆராயப்பட்ட தொழில்; என்று கொண்டு - என முடிவு செய்து; அம் மயில் போல் குழீஇ - அழகிய மயில்களைப்போற் கூடி; ஆயம் போந்தது - ஆயம் அவளுடனே சென்றது; பொழிலும் பொலிந்தது மலர்ப் பொழிலும் அவர்களால் அழகுற்றது. 
 |