| பதுமையார் இலம்பகம் |
751 |
|
| 1323 |
காது சோ்ந்த கடிப்பணை கையது |
| |
தாது மல்கிய தண்கழு நீர்மல |
| |
ரோத நித்தில வட்டமொர் பொன்செய்நாண் |
| |
கோதை வெம்முலை மேற்கொண்ட கோலமே. |
|
|
(இ - ள்.) காது சேர்ந்த கடிப்பிணை - காதைச் சேர்ந்தன கடிப்பிணை என்னும் அணி; கையது தாது மல்கிய தண்கழு நீர்மலர் - கையில் உள்ளது மகரந்தம் நிறைந்த தண்ணிய கழுநீர் மலர்; வெம்முலை ஓத நித்தில வட்டம் ஓர் பொன்செய் நாண் - முலையிடத்தன கடல் முத்துமாலையும் ஒரு பொன்வடமும்; கோதைமேற்கொண்ட கோலம் - இது பதுமை மேற்கொண்ட ஒப்பனை.
|
|
|
(வி - ம்.) காமநோயினால் ஒப்பனை சிறிதாக இருந்தது.
|
|
|
கடிப்பிணை - ஒருவகைக் காதணி : கடிப்பு இணை எனக் கண்ணழித்தல் வேண்டும். ”கோலவித்தகம் குயின்ற நுட்பத்துத் தோடும் கடிப்பும் துயல்வருங் காதினர் வாலிழை மகளிர்” எனப் பெருங்கதையினும் (2 : 7. 37-8) வருதல் காண்க ”வயிரக்கடிப்பிட்டு வார் காது தாழப் பெருக்கி” என்னும் பெரியாழ்வார் திருமொழியால் இவ்வணி காதினைத் தாழப் பெருக்குதற் கிடப்படுதல் உணரலாம்.
|
( 158 ) |
| 1324 |
விண்பு தைப்பன வெண்மலர் வேய்ந்துளாற் |
| |
கண்பு தைப்பன காரிரும் பூம்பொழில் |
| |
சண்ப கத்தணி கோதைநின் றாடனி |
| |
நண்ப னைந்நினை யாநறு மேனியே |
|
|
(இ - ள்.) சண்பகத்து அணி கோதை நறுமேனி - சண்பகத்தின் கோதையை யொத்த நல்ல மெய்யினாள்; விண் புதைப்பன வெண்மலர் வேய்ந்து - வானை மறைக்கும் வெண்மையான மலர்கள் வேயப்பெற்று; உளால் கண்புதைப்பன கார் இரும்பூம்பொழில் - உள்ளிடம் கண்ணை மறைப்பனவாகிய கரிய பெரிய மலர்ப் பொழிலிலே; நண்பனை நினையா தனி நின்றாள் - நண்பனை நினைத்துப் பொழிலிலே தனியே நின்றாள்.
|
|
|
(வி - ம்.) அப் பொழில் - அவன் சேர்ந்த மாதவிப் பொழில்.
|
|
|
விண்ணை மறைப்பனவாகிய பொழில், மலராலே வேயப்பட்டு உள்ளிடம் கண்ணை மறைப்பனவாகிய பொழில் எனத் தனித்தனிகூட்டுக.
|
( 159 ) |
| 1325 |
கறந்த பாலினுட் காசி றிருமணி |
| |
நிறங்கி ளர்ந்துதன் னீர்மைகெட் டாங்கவண் |
| |
மறைந்த மாதவி மாமை நிழற்றலிற் |
| |
சிறந்த செல்வனுஞ் சிந்தையி னோக்கினான். |
|