| பதுமையார் இலம்பகம் |
754 |
|
| 1330 |
களித்த கண்ணிணை காம்பென வீங்குதோட் |
| |
டெளிர்த்த வெள்வளை சோ்ந்தது மாமையுந் |
| |
தளித்த சுண்ணஞ் சிதைந்தன குங்கும |
| |
மளித்த பூம்பட் டணிந்து திகழ்ந்ததே. |
|
|
(இ - ள்.) கண்இணை களித்த - (அப்போது) கண்களிரண்டும் களித்தன; காம்பு என வீங்குதோள் வள்வளை தெளிர்த்த - மூங்கில் எனப் பருத்த தோள்களில் வெள்வளைகள் ஒலித்தன; மாமையும் சேர்ந்தது - போன மாமைநிறம் வந்து சேர்ந்தது; தளித்த சுண்ணம் குங்குமம் சிதைந்தன - பூசிய சுண்ணப் பொடியும் குங்குமமும் அழிந்தன; அளித்த பூம்பட்டு அணிந்து திகழ்ந்தது - இவனால் அருள் பண்ணப்பட்ட பட்டும் அணியப் பெற்று விளங்கியது.
|
|
|
(வி - ம்.) புணர்ச்சி நீங்கிப் பட்டணிந்தாளாதலின் அது திகழ்ந்தது.
|
|
|
கண்ணிணை களித்த என மாறுக. வெள்வளை - வெள்ளிய சங்கவளையல். மாமையும் சேர்ந்தது என மாறுக. தளித்த - பூசிய. அளித்த - சீவகனால் வழங்கப்பட்ட என்க.
|
( 165 ) |
| 1331 |
குவளை ஏய்ந்த கொடுங் குழை கூந்தலுள் |
| |
திவளும் வாழிய செம் பொறி வண்டுகாள் |
| |
இவள கூர் எயிறு ஈனும் தகையவோ |
| |
தவள மெல் இணர்த் தண் கொடி முல்லையே |
|
|
(இ - ள்.) குவளை ஏய்ந்த கொடுங்குழை கூந்தலுள் - குவளை மலர் பொருந்திய, வளைந்த மகரக் குழையை அணிந்தவளின் கூந்தலிலே; திவளும் செம்பொறி வண்டுகாள்! - துவளும் செம்புள்ளி வண்டுகளே!; தவளமெல் இணர்த்தண் கொடிமுல்லை - வெண்மையான மெல்லிய பூங்கொத்துக்களையுடைய தண்ணிய கொடிமுல்லைகள்; இவளகூர் எயிறு ஈனும் தகையவோ? - இவளுடைய கூரிய எயிற்றை ஈனும் தகுதியுடையவோ ? கூறுமின்.
|
|
|
(வி - ம்.) வாழிய : அசை. இவள : அ : ஆறனுருபு.
|
|
|
ஏய்ந்த - இயைந்த. கொடுங்குழை : அன்மொழித்தொகை; பதுமை, திவள்தல் - துவளுதல். தவளமெல்லிணர் - வெள்ளிய மெல்லிய பூங்கொத்தினையுடைய.
|
( 166 ) |
| 1332 |
பொன் துஞ்சு ஆகத்துப் பூங் கண்கள் போழ்ந்த புண் |
| |
இன்று இப் பூண் கொள் இள முலைச் சாந்து அலால் |
| |
அன்றித் தீர்ப்பன யாவையும் இல்லையே |
| |
என்று மாதர் எழில் நலம் ஏத்தினான் |
|