| பதுமையார் இலம்பகம் |
759 |
|
|
நிறுத்த காம வாயில் - நிறையே அருளே உணர்வொடு திருவென, முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே' (தொல் - மெய்ப். 25) என்பதை மேற்கொண்டு, '25' என இவ் வொப்பில் வந்ததால், ' உட்கு' என இதற்குப் பொருள் கொண்டனர் போலும்.
|
( 175 ) |
| 1341 |
உள்விரித் திதனை யெல்லா |
| |
முரைக்கென மொழிந்து விட்டான் |
| |
றெள்ளிதிற் றெரியச் சென்றாங் |
| |
குரைத்தலுங் குமரன் றேறி |
| |
வெள்ளிலை யணிந்த வேலான் |
| |
வேண்டிய தாக வென்றா |
| |
னள்ளிலை வேல்கொண் மன்னற் |
| |
கமைச்சனஃ தமைந்த தென்றான் |
|
|
(இ - ள்.) இதனை யெல்லாம் உள்விரித்து உரைக்க என மொழிந்துவிட்டான் - (அதனைக் கேட்ட மன்னன்) இந் நிலைமையெல்லாம் அவனுக்குத் தெளிவாக விளக்கியுரைப்பாயாக என்று, கூறிவிட்டான்; ஆங்குச் சென்று தௌ்ளிதின் தெரிய உரைத்தலும் - மந்திரியும் ஆங்குச் சென்று தெளிவாக விளக்கிக் கூறலும்; குமரன் தேறி - சீவகன் தெளிய வுணர்ந்து; வெள் இலை அணிந்த வேலான் வேண்டியது ஆக என்றான் - வெற்றிலை போன்ற முகமுடைய வேலையுடைய மன்னன் விரும்பியவாறே ஆகுக என்றான்; அள் இலை வேல் கொள் மன்னற்கு அமைச்சன் அஃது அமைந்தது என்றான் - (அது கேட்டு) கூரிய வேலணிந்த மன்னனிடம் சென்று மந்திரி அஃது அப்படியே முடிந்த தென்றான்.
|
|
|
(வி - ம்.) இதனை - இக்கருத்தினை. குமரன் : சீவகன். வேண்டியது - தனபதிமன்னன் விரும்பியது. வெள்ளிலை - வெற்றிலை. அணிந்த : உவமவுருபு. மன்னற்கு : தனபதிக்கு. அமைச்சன் : மதிதரன். அஃது - அக்காரியம்.
|
( 176 ) |
| 1342 |
பொன்றிய வுயிரை மீட்டான் |
| |
பூஞ்சிகைப் போது வேய்ந்தா |
| |
னன்றியு மாமெய் தீண்டி |
| |
யளித்தன னழகின் மிக்கா |
| |
னொன்றிய மகளிர் தாமே |
| |
யுற்றவர்க் குரிய ரென்னா |
| |
வென்றிகொள் வேலி னாற்கே |
| |
பான்மையும் விளைந்த தன்றே. |
|