| பதுமையார் இலம்பகம் |
766 |
|
| |
கணைக்கா னுணுகிய நுசுப்பின் |
|
| |
மழைக்கண் மாதர் பணைப்பெருந் தோட்டே.” |
|
| |
(தொல்.கள.10. மேற்.)
|
|
|
எனவரும் பழம்பாட்டை ஒப்புக் காண்க.
|
( 188 ) |
| 1354 |
மாநீர் மணிமுகிலின் மின்னுக் |
| |
கொடிநுசுப்பின் மயிலஞ் சாய |
| |
லேநீ ரிருபுருவ மேறி |
| |
யிடைமுரிந்து நுடங்கப் புல்லித் |
| |
தூநீர் மலர்மார்பன் றொன்னலந் |
| |
தான்பருகித் துளும்புந் தேறற் |
| |
றெனீர் மலர்மாலை தேன்றுளித்து |
| |
மட்டுயிர்ப்பச் சூட்டி னானே. |
|
|
(இ - ள்.) மாநீர் மணி முகிலின் மின்னுக்கொடி நுசுப்பின் மயில் அம் சாயல் - மிகு நீரையுடைய, மணிபோன்ற முகிலினிடத்து மின் கொடிபோலும் இடையினையுடைய மயில்போன்ற சாயலாளை; ஏ நீர் இரு புருவம் ஏறி - தன்னைக் கூட்டத்திற்கு ஏவும் இயல்புடைய இரு புருவமும் நெற்றியில் ஏறி; இடைமுரிந்து நுடங்க - இடை ஒசிந்து அசைய; தூநீர் மலர் மார்பன் - தூய தன்மையுற்ற மலர்ந்த மார்பனான சீவகன்; புல்லி - (அவளைத்) தழுவி; தொல் நலம் பருகி - பழமையான அழகை நுகர்ந்து; துளும்பும் தேறல் தேன் நீர் மலர் மாலை - ததும்பும் மதுவினைப் பருகும் வண்டின் இயல்பினையுடைய மலர் மாலையை; தேன் துளித்து மட்டு உயிர்ப்பச் சூட்டினான் - இனிமை துளிர்த்து மதுவைச் சிந்த அணிவித்தான்
|
|
|
(வி - ம்.) மணி முகிலின் : இன் : சாரியை; ஏழனுருபு என்பர் நச்சினார்க்கினியர். மேலும் 'மட்டுத் தேறல்' என மாறிக் 'காம பானத்தின் தெளிவைப் பருகி' என்பர். உயிர்த்தல் - சுமை போக்குதல்.
|
( 189 ) |
வேறு
|
|
| 1355 |
தேனடைந் திருந்த கண்ணித் |
| |
தென்மட்டுத் துவலை மாலை |
| |
யூனடைந் திருந்த வேற்க |
| |
ணொண்டொடி யுருவ வீணை |
| |
தானடைந் திருந்த காவிற் |
| |
பாடினா டனிமை தீர்வான் |
| |
கூனடைந் திருந்த திங்கட் |
| |
குளிர்முத்த முலையி னாளே. |
|