| பதுமையார் இலம்பகம் | 
770  | 
  | 
| 
 கங்குல் இருளிடை ஏகலுற்றான் - யாவரும் செல்லும் செலவை நடுவறுத்த இரவில் இருளிலே செல்லத் தொடங்கினான். 
 | 
  | 
| 
    (வி - ம்.) 'நல் உயிர்' ஆன்மா. அது கனவிடைப் போய் நுகர்ந்து மீண்டும் அவ்வுடம்பின்கண் வருமாறு போல இவனும் பல மகளிரையும் நுகர்ந்து பின்பு கூடுவன். இனி, உடம்பு நல்லுயிரை நீங்கிப் போனாற்போல் என்றும் உரைப்பர். 
 | 
( 195 ) | 
வேறு
 | 
  | 
|  1361 | 
நீனி றக்குழ னோ்வளைத் தோளியைத் |  
|   | 
தானு றக்கிடை நீத்தலுந் தன்பினே |  
|   | 
வேனி றக்கண் விழித்தன ளென்பவே |  
|   | 
பானி றத்துகிற் பையர வல்குலாள். |  
 
 
 | 
| 
    (இ - ள்.) நீல் நிறக் குழல் நேர் வளைத் தோளியை - நீல நிறக் கூந்தலையும் அழகிய வளையணிந்த தோளையும் உடையாளை; தான் உறக்கிடை நீத்தலும் - சீவகன் துயிலிடைப் பிரிந்தனனாக; தன் பினே - அவன் பிரிவிற்குப் பின்னே; பால் நிறத் துகில் வை அரவு அல்குலாள் - வெண்ணிறத் துகிலையும் பாம்பின் படமனைய அல்குலையும் உடையாள்; வேல் நிறக் கண் விழித்தனள் - வேலனைய ஒளி பொருந்திய கண்ணை விழித்தனள். 
 | 
  | 
| 
    (வி - ம்.) என்ப ஏ : அசைகள். 
 | 
  | 
| 
    நீலநிறம் - நீல்நிறம் என அகரங்கெட்டு நின்றது. தோளி : பதுமை. உறக்கு - துயில். அல்குலாள் கண் விழித்தனள் என்க. 
 | 
( 196 ) | 
|  1362 | 
ஆக்கை யுள்ளுறை யாவி கெடுத்தவண் |  
|   | 
யாக்கை நாடி யயர்வது போலவுஞ் |  
|   | 
சேக்கை நாடித்தன் சேவலைக் காணிய |  
|   | 
பூக்க ணாடுமொர் புள்ளுமொத் தாளரோ. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஆக்கை யுள் உறை ஆவி கெடுத்து - உடம்பு தன் உள்ளே இருக்கும் உயிரைக் கெடுத்து; யாக்கை நாடி அயர்வது போலவும் - திரும்பவும் பிணித்தலை நினைத்து வருந்துவது உண்டாயின் அதனைப் போலவும்; தன் சேவலைக் காணிய - தன் சேவலைக் காணவேண்டி; சேக்கை நாடி - கூட்டிலே தேடி (அங்குக் காணாமையின்); பூக்கண் நாடும் - மலர்களிலே தேடுகின்ற; ஒர் புள்ளும் ஒத்தாள் - ஓர் அன்னப் பேட்டினைப் போலவும் ஆயினாள். 
 | 
  | 
| 
    (வி - ம்.) ஆக்கை - உடல். யாக்கை - கட்டுதல். சேக்கை : தங்குமிடம்; உறையுள். சேவல் புள் என்பன பூக்கண் நாடும் என்றதனான் அன்னச் சேவலும் அதன் பெடையும் என்பது பெற்றாம். 
 | 
( 197 ) |