| பதுமையார் இலம்பகம் |
772 |
|
|
(இ - ள்.) தன் ஒப்பாரை இல்லானைத் தலைச் சென்று - தனக்கு நிகராவார் இல்லாதவனிடத்தே சென்று; என் பொன் ஒப்பாளொடும் போக என - என் திருவனையாளொடும் போவாயாக என்று; போகடாய் துன்னித் தந்திலை நீ என - அவனைச் செல்ல விடாயாய் என்னிடத்தே பொருந்தக் கொணர்ந்திலை நீ என்று; தூச் சிறை அன்னப் பேடையோடு ஆற்றக் கழறினாள் - தூய சிறகுகளையுடைய அன்னப் பேடையுடன் மிகவும் சினந்துரைத்தாள்.
|
|
|
(வி - ம்.) போக விடாய் : போகடாய் என விகாரப்பட்டது.
|
|
|
தன்னொப்பாரையில்லான் : சீவகன். பொன் : திருமகள். தூச்சிறை - வெள்ளை நிறமுடைய சிறகுமாம். ஆற்ற - மிகவும். கழறுதல் - இடித்துரைத்தல்.
|
( 200 )
|
| 1366 |
மையில் வாணெடுங் கண்வள ராதன |
| |
மெய்யெ லாமுடை யாய்மெய்ம்மை காண்டிநீ |
| |
யையன் சென்றுழிக் கூறுகென் றாய்மயில் |
| |
கையி னாற்றொழு தாள்கயற் கண்ணினாள். |
|
|
(இ - ள்.) வளராதன - துயிலாதனவாகிய; மை இல்வாள் நெடுங்கண் - மைதீட்டப் பெறாத ஒளியுறும் நீண்ட கண்களை; மெய்யெலாம் உடையாய் - உடலெலாம் உடைய மயிலே!; மெய்ம்மை காண்டி நீ - உண்மை உணர்வாய் நீ; ஐயன் சென்றுழிக் கூறுக என்று - என் தலைவன் சென்ற இடத்தைக் கூறுக என்று; கயல் கண்ணினாள் - கயலனைய கண்ணினாள்; ஆய் மயில் கையினால் தொழுதாள் - ஆராய்ந்த மயிலைக் கைகளால் தொழுதாள்.
|
|
|
(வி - ம்.) கண் : பீலிக் கண். துயிலாத கண்களையுடைமையின், அவனைக் காட்டும் என்று தொழுதாள். வாள் என அடை கூறினார் கண்ணென்பதற் கேற்ப.
|
|
|
வளராதன மையில் வாள் நெடுங்கண் மெய்யெலாம் உடையாய் என மாறுக. கண் உடையாய் என்றது மெய்ம்மை காண்டற்குக் குறிப்பேது வாய் நின்றது. ஐயன் : சீவகன். ஆய் - அழகிய. கண்ணினாள் : பதுமை. இச்செய்யுளோடு, ”ஓடா நின்ற களிமயிலே ...... ஆயிரங் கண்ணுடையாய்க்கு ஒளிக்குமாறுண்டோ” எனவரும் கம்பர் செய்யுளை (பம்பை - 27) ஒப்பு நோக்குக.
|
( 201 ) |
| 1367 |
வளர்த்த செம்மையை வாலியை வான்பொருள் |
| |
விளக்கு வாய்விளக் கேவிளக் காயிவ |
| |
ணளித்த காதலொ டாடுமென் னாருயி |
| |
ரொளித்த தெங்கென வொண்சுடர் நண்ணினாள். |
|