பதுமையார் இலம்பகம் |
776 |
|
1374 |
அரக்குண் டாமரை யன்னதன் கண்மலர் |
|
விருத்தி மாதர் விலக்க வெரீஇக்கொலோ |
|
வருத்த முற்றன ளென்றுகொன் மேகலை |
|
குரற்கொ டாது குலுங்கிக் குறைந்ததே. |
|
(இ - ள்.) அரக்கு உண் தாமரை அன்ன தன் கண்மலர் - அரக்கின் நிறத்தைக் கொண்ட தாமரை மலர் போன்ற தன் கண் மலர்களின்; விருத்தி மாதர் விலக்க வெரீஇக் கொலோ? - அஞ்சனத்தையும் மையையும் பதுமை விலக்குதலாலே நமக்கும் துன்பம் வருமென்று அஞ்சியோ?; வருத்தம் உற்றனள் என்று கொல்? - இவள் வருந்தினாள் என்றோ?; மேகலை குலுங்கி குரல் கொடாது குறைந்தது - மேகலை அசைந்து ஆரவாரியாமல் ஓசை அடங்கியது.
|
|
(வி - ம்.) விருத்தி - வாழ்வு. குலுங்கல் - அசைதல். மெய் யசையாமற் சோர்ந்ததை இங்ஙனங் கூறினார்.
|
( 209 ) |
வேறு
|
|
1375 |
துனிவா யினதுன் னுபுசெய் தறியேன் |
|
றனியே னொருபெண் ணுயிரென் னொடுதா |
|
னினியா னிஙனே யுளனே யுரையீர் |
|
பனியார் மலர்மேற் படுவண் டினமே. |
|
(இ - ள்.) பனி ஆர் மலர்மேல் படு வண்டினமே! - தண்மை நிறை மலரின்மேல் மெல்லிய வண்டினமே!; துன்னுபு துனிவு ஆயின செய்து அறியேன் - நான் அவனைப் பொருந்தி நின்று அவற்கு வெறுப்பானவற்றைச் செய்தறிபேன், தனியேன், ஒரு பெண் உயிர் - நான் தனித்தறியேன்; என் உயிரே ஒரு பெண்ணுயிர்; என்னொடுதான் இனியான் - என்னிடம் இனிய னாகிய அவன்; இஙனே உளனே? உரையீர் - இவ்விடங்களிலே உளனோ? உரைப்பீர்.
|
|
(வி - ம்.) அவன் எனக்கு இனிய னாகையால் உரைத்தீர் என்று முனியான் எனற்கு; 'இனியான்' எனவும், பெண்ணுயிர் நீங்கிற் கண்டிருத்தல் பாவம் எனற்குப், 'பெண்ணுயிர்' எனவும் கூறினார்.
|
( 210 ) |
1376 |
நிரைவீ ழருவிந் நிமிர்பொன் சொரியும் |
|
வரையே புனலே வழையே தழையே |
|
விரையார் பொழிலே விரிவெண் ணிலவே |
|
யுரையீ ருயிர்கா வலனுள் வழியே. |
|
(இ - ள்.) வீழ் அருவி நிரை நிமிர் பொன் சொரியும் வரையே! - வீழும் அருவி நிரைகளையுடைய உயர்ந்த பொன்
|
|