பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 778 

   (வி - ம்.) நீயிரும் மகளிரே ஆதலின் கணவன் அகலின் உயிர் கையகறல் உணர்வீர் என்பது கருத்து. பிறபெண்டிர்க்கிரங்குதல் மகளிர்க்கியல்பாகலின் எனக் கிரங்கிக் கொணர்வீர் என்பது கருத்து. புணர்வின் இனிய புலவி என்றதனை, 'புணர்தலின் ஊடல் இனிது' என்னும் வள்ளுவர் மொழியோடு ஒப்புக் காண்க.

( 213 )
1379 நகைமா மணிமா லைநடைக் கொடிநின்
வகைமா மணிமே கலையா யினதே
லகையா தெனதா விதழைக் குமெனத்
தகைபா டவலாய் ளர்கோ தளர்கோ.

   (இ - ள்.) நகை மாமணி மாலை நடைக்கொடி! - ஒளியுறும் மணிகளாலாகிய மாலையணிந்த நடந்து திரியுங் கொடியே!; நின் வகை மாமணி மேகலை ஆயினதேல் - நின் வகைப்பட்ட பெரிய மணிமேகலை ஆயிற்றேல்; எனது ஆவி அகையாது தழைக்கும் என - என் உயிர் தாழ்தலின்றித் தளிர்க்கும் என்று; தகை பாடவலாய்! தளர்கோ! தளர்கோ!! - என் நலம் பாராட்ட வல்லாய்! தளர்வேனோ! தளர்வேனோ!!

 

   (வி - ம்.) இது முதல் எதிர் பெய்து பரிதல். எதிர் பெய்து பரிதலாவது தலைமகனையும் அவன் தேர் முதலியவற்றையும் தன் எதிர் பெய்துகொண்டு பரிந்து கையறல் : (தொல். மேய்ப். 22. பேர்.) ஓகாரம் : எதிர்மறை இறந்துபடுவேன் என்பது கருத்து. தளர்கு : தன்மையொருமை வினைமுற்று. 'வல்லாய்' என்பது பொய்யுரைக்க வல்லவன் என்பதைக் குறிக்கின்றது.

( 214 )
1380 புனைதார் பொராநொந் துபொதிர்ந் தவென
வினையா ரெரிபூண் முலைகண் குளிர
வுன்கண் மலரா லுழுதோம் பவலாய்
நினையா துநெடுந் தகைநீத் தனையே.

   (இ - ள்.) புனைதார் பொரா நொந்து பொதிர்ந்த என - நீ புனைந்த மாலைகள் பொருதலால் நொந்து வீங்கின என்றுகூறி; வினையார் எரிபூண் முலைகண் குளிர - தொழிலமைந்த விளங்குகின்ற பூண் அணிந்த முலைகளின் கண்குளிரும்படி; உன் கண்மலரால் உழுது ஓம்ப வலாய் - உன்னுடைய கண்மலர்களால் உழுது பொய்யை மெய்யாகப் போற்ற வல்லவனே!; நெடுந்தகை! - பெருந்தகையே!; நினையாது நீத்தனையே - பிரியின் வாழாள் என்று நினையாமல் நீத்தாயே.

 

   (வி - ம்.) கண்மலரால் உழுதலாவது இவைசாலவும் அழகுடையன என்று கூர்ந்து நெடிது நோக்கிப் பாராட்டுதல். இங்ஙனம் நோக்கிப் பாராட்டுங்கால் தன்னெஞ்சங் குளிர்ந்ததனை முலைமேலேற்றி முலை கண் குளிர என்றாள். நினையாது என்றது யாம் பிரிந்துழி இவள் நிலை என்னாம் என்று கருதாதே என்றவாறு.

( 215 )