பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 781 

வேறு

 
1385 கரப்புநீர்க் கங்கை யங்கட்
  கடிமலர்க் கமலப் பள்ளித்
திருத்தகு திரைக டாக்கச்
  சேப்புழிச் சேவ னீங்கப்
பரற்றலை முரம்பிற் சின்னீர்
  வறுஞ்சுனைப் பற்று விட்ட
வரத்தவாய்ப் பவளச் செந்தாட்
  பெடையன்ன மழுவ தொத்தாள்.

   (இ - ள்.) பரல்தலை முரம்பின் சின்னீர் வறுஞ்சுனைப் பற்றுவிட்ட - பரற்கற்கள் பொருந்திய மேட்டு நிலத்திலே சிறிதே நீரையுடைய வறிய சுனையிலே கொண்ட பற்றைவிட்ட; அரத்த வாய்ப் பவளச் செந்தாள் பெடை அன்னம் - சிவந்த வாயையும் பவளமனைய சிவந்த கால்களையும் உடைய பெட்டை அன்னம்; கரப்பு நீர்க் கங்கை அங்கண் - சிவன் சடையிற் கரத்தலையுடைய கங்கையின் அழகிய இடத்திலுள்ள; கடி மலர்க் கமலப் பள்ளி - மணமிகு மலராகிய தாமரை யணையிலே; திருத்தகு திரைகள் தாக்கச் சேப்புழி - அழகு பொருந்திய அலைகள் அலைத்துத் துயிற்றச் சேவலோடு துயிலும்போது; சேவல் நீங்க - சேவல் நீங்குதலால்; அழுவது ஒத்தாள் - முன்னிருந்த வறிய சுனையிலே இருந்து அழுவதைப் போன்றாள்.

 

   (வி - ம்.) கரப்பு நீர்க் கங்கை - பாதாள கங்கையெனினும் ஆம். அவனைக் கூடிய பின்பு தந்தையில்லம் கங்கையாய், அவன் நீங்குதலால் அச் சுனையின் தன்மைய தாயிற்று. அன்னம் சுனையில் தங்குதல் இல் பொருளுவமை.

( 220 )
1386 மெழுகினாற் புனைந்த பாவை
  வெய்துறுத் தாங்கு மோவா
தழுதுநைந் துருகு கின்ற
  வாயிடைத் தோழி துன்னிக்
கெழீஇயினாள் கேள்வி நல்யாழ்க்
  கிளைநரம் பனைய சொல்லாள்
கழிபெருங் கவலை நீங்கக்
  காரண நீர சொன்னாள்.

   (இ - ள்.) மெழுகினால் புனைந்த பாவை வெய்துறுத் தாங்கு - மெழுகாற் செய்த பாவையைத் தீயுறுத்தாற்போல; ஓவாது அழுது நைந்து உருகுகின்ற ஆயிடை - ஓய்வின்றி அழுது நைந்து