பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 784 

1390 தேன்சென்ற நெறியுந் தெண்ணீர்ச்
   சிறுதிரைப் போர்வை போர்த்து
மீன்சென்ற நெறியும் போல
  விழித்திமைப் பவர்க்குந் தோன்றா
மான்சென்ற நோக்கின் மாதே
   மாய்ந்துபோ மக்கள் யாக்கை
யூன்சென்று தேயச் சிந்தித்
  துகுவதோ தகுவ தென்றாள்.

   (இ - ள்.) மான் சென்ற நோக்கின் மாதே! - மான் கண் போன்று செல்லும் பார்வையுடைய மாதே!; தேன் சென்ற நெறியும் - வண்டுகள் மலரைத் தேடிச் செல்கின்ற வழியும்; சிறுதிரைப் போர்வை போர்த்து மீன் சென்ற நெறியும் போல - சிற்றலையாகிய போர்வையைப் போர்த்துக் கொண்டு மீன் செல்கின்ற வழியும் போல; மக்கள் யாக்கை - மக்களின் உடம்பு; விழித்து இமைப்பவர்க்கும் தோன்றா மாய்ந்துபோம் - விழித்து இமைப்பவர்கட்குந் தெரியாதனவாய் மடிந்து போகும்; ஊன் சென்று தேயச் சிந்தித்து உகுவதோ தகுவது? என்றாள் - மெய் சிறிது சிறிதாகத் தேயுமாறு நினைந்து கெடுதலோ தகுதியாகும்! என்றாள்.

 

   (வி - ம்.) தேன் - வண்டு. நெறி - வழி. தேனும் மீனும் போனவழி அறியமுடியாததுபோல் மக்கள் யாக்கை அழிந்துபோம் வழியும் அறிய முடியாது என்றவாறு விழித்திமைப்பவர் - மக்கள் என்றார் நச்சினார்க்கினியர். சிந்தித்துகுவதோ தகுவது என்றது சிந்தித்து உகாமையே தகுவது என்னும் பொருள் குறித்து நின்றது.

( 225 )
1391 பிரிந்தவற் கிரங்கிப் பேதுற்
  றழுதநங் கண்ணி னீர்கள்
சொரிந்தவை தொகுந்து நோக்கிற்
  றொடுகடல் வெள்ள மாற்றா
முரிந்தநம் பிறவி மேனாண்
  முற்றிழை யின்னு நோக்காய்
பரிந்தழு வதற்குப் பாவா
  யடியிட்ட வாறு கண்டாய்.

   (இ - ள்.) முற்றிழை இன்னும் நோக்காய் - முற்றிழையே! இன்னும் மனத்தாலே நோக்குவாயாக; மேல்நாள் முரிந்த நம் பிறவி - மேல் நாட்களில் இற்ற நம் பிறவிகளிலே; பிரிந்தவற்கு இரங்கிப் பேதுற்று அழுத நம் கண்ணின் நீர்கள் - அப்பொழுது