| பதுமையார் இலம்பகம் | 
785  | 
  | 
| 
 பிரிந்தவனே கணவனாக அவற்றே பேதுற்று அழுத நம் கண்ணின் நீர்கள்; சொரிந்தவை தொகுத்து நோக்கின் - சொரிந்தவற்றைத் தொகுத்துப் பார்த்தால்; தொடுகடல் வெள்ளம் ஆற்றா - தொட்ட கடலின் பெருக்கும் உறையிடவும் போதாது; பாவாய்! பரிந்து அழுவதற்கு அடியிட்ட ஆறு கண்டாய் - பாவையே! பரிவுற்று மேலும் அழுதற்கு இந்நாள் அடியிட்டபடியென்றறிவாய். 
 | 
  | 
| 
    (வி - ம்.) இப்பொழுது பிரிந்த இவனுக்கே என்பது படப் பிரிந்தவற்கு என ஒருமையாற் கூறினர். அன்புடைக்காதலர் பிறவிகடோறும் கணவனும் மனைவியுமாகப் பிறப்பர் என்பது ஒரு கொள்கை. இதனை, 
 | 
  | 
|   | 
”நினக்கிவன் மகனாத் தோன்றிய தூஉம் | 
  | 
|   | 
மனக்கினி யார்க்குநீ மகளாய தூஉம் | 
  | 
|   | 
பண்டும் பண்டும் பல்பிறப் புளவால்.” (மணி. 21. 29 - 31) | 
  | 
| 
 என வரும் மணிமேகலையானும் உணர்க. 
 | 
  | 
| 
    பரிந்தழுவதற்கு அடியிட்டவாறு என்றது இங்ஙனம் அழும் அழுகைக்கு முடிவில்லை என்றவாறு. 
 | 
( 226 ) | 
|  1392 | 
அன்பினி னவலித் தாற்றா |  
|   | 
  தழுவது மெளிது நங்க |  
|   | 
ளென்பினி னாவி நீங்க |  
|   | 
  விறுவது மெளிது சோ்ந்த |  
|   | 
துன்பத்தாற் றுகைக்கப் பட்டார் |  
|   | 
  துகைத்தவத் துன்பந் தாங்கி |  
|   | 
யின்பமென் றிருத்தல் போலு |  
|   | 
  மரியதிவ் வுலகி லென்றாள். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அன்பினின் அவலித்து ஆற்றாது அழுவதும் எளிது - நம் காதலரிடம் அன்பினாலே வருந்தி ஆற்றவியலாமல் அழுவதும் எளிது; நங்கள் என்பினின் ஆவி நீங்க இறுவதும் எளிது - நம் உடம்பிலிருந்து உயிர்போம்படி இறத்தலும் எளிது; சேர்ந்த துன்பத்தால் துகைக்கப்பப்பட்டார் - தம் காதலர் சேர்ந்து பிரிந்ததனால் பிறந்த துன்பத்தாலே வருத்தப்பட்ட மகளிர்; துகைத்த அத் துன்பம் தாங்கி - அங்ஙனம் வருத்தின அவ்வருத்தத்தைப் பொறுத்து; இன்பம் என்று இருத்தல் இவ்வுலகில் அரியது போலும் என்றாள் - இது நமக்கு இன்பம் என்று இருப்பதே இவ்வுலகில் அரியதாகும் என்றாள். 
 | 
  | 
| 
    (வி - ம்.) நங்கள் : கள் : அசை. போலும் : ஒப்பில் போலி. 
 | 
  | 
| 
    அவலித்து - வருந்தி. எல்லோரும் செய்வதொன்றாகலின் அழுவது எளிது என்றாள். இறுவதும் - இறந்து படலும். மெய்யுணர்வுடை 
 | 
  |