| பதுமையார் இலம்பகம் |
789 |
|
|
நீரையுந் துடைத்து; அகில் கலந்து நாறும் அல்குல் கவான் மிசைக்கொண்டிருந்தாள் - அகில் மணம் கலந்து கமழும் அல்குலையுடைய தன் துடையின் மேலே கொண்டிருந்தாள்; பொழுது புலர்ந்தது - அப்பொழுது இரவும் விடிந்தது; நல்லாள் நெஞ்சமும் புலர்ந்தது - பதுமையின் உள்ளமும் தெளிந்தது.
|
|
|
(வி - ம்.) அலங்கல் - மாலை. குழல் - கூந்தல். பொலங்கலம் - பொன்னாலியற்றிய அணிகலம். கொடியனாள் : பதுமை. கவான் - துடை.
|
( 232 ) |
| 1398 |
கண்கனிந் தினிய காமச் செவ்வியுட் காளை நீங்கத் |
| |
தெண்பனி யனைய கண்ணீர்ச் சேயிழை தாய ரெல்லாந் |
| |
தண்பனி முருக்கப் பட்ட தாமரைக் காடு போன்றார். |
| |
பண்கனிந் தினிய பாடற் படுநரம் பிளகி யாங்குக் |
| |
|
|
(இ - ள்.) பண் கனிந்து இனிய பாடல் படு நரம்பு இளகி யாங்கு - பண் முற்றுப்பெற்று இனிய பாட்டையுடைய ஒலிக்கின்ற நரம்பு பாடலிலே நெகிழ்ந்தாற்போலே; கண் கனிந்த இனிய காமச் செவ்வியுள் - பதுமையின் மெய்யிடங் குழைந்த இனிய காமச் செவ்வியிலே; காளை நீங்க - சீவகன் நீங்கினான் ஆதலின்; தெண் பனி அனைய கண்ணீர்ச் சேயிழை தாயர் எல்லாம் - தெளிந்த பனித்துளி போன்ற கண்ணீரையுடைய பதுமையின் தாயரெல்லாரும்; தண்பனி முருக்கப்பட்ட தாமரைக் காடு போன்றார் - குளிர்ந்த பனியினால் வெதும்பப்பெற்ற தாமரைக் காடுபோல முகம் கருகினர்.
|
|
|
(வி - ம்.) பண்கனிந்து படுநரம்பு இனிய பாடல் படுநரம்பு எனத் தனித்தனி கூட்டுக. கண்கனிந்து என்புழி, கண் இடம் என்னும் பொருட்டு. காளை : சீவகன். சேயிழை : பதுமை. தாயர் : நற்றாயும் செவிலித்தாயரும் என்க.
|
( 233 ) |
| 1399 |
சில்லரிச் சிலம்பு சூழ்ந்த |
| |
சீறடித் திருவி னற்றாய் |
| |
முல்லையங் குழலி னாய்நின் |
| |
முலைமுதற் கொழுநன் மேனாட் |
| |
சொல்லியு மறிவ துண்டோ |
| |
வெனக்குழைந் துருகி நைந்து |
| |
மெல்லியல் கங்குல் சொல்லிற் |
| |
றிற்றென மிழற்று கின்றாள். |
|
|
(இ - ள்.) சில் அரிச் சிலம்பு சூழ்ந்த சீறடித்திருவின் நற்றாய் - சில பரல்களையுடைய சிலம்பு அணிந்த சிற்றடியாள்
|
|