| நாமகள் இலம்பகம் |
79 |
|
|
(இ - ள்.) திங்கள் முக்குடையான் திருமாநகர் - திங்களனைய முக்குடையானாகிய அருகப்பெருமானின் திருக்கோயில்; எங்கும் எங்கும் இடந்தொறும் உண்மையால் - தெருவிடம் எங்கும் இடந்தோறும் உண்டாகையினாலே; அம்கண் மாநகர்க்கு அறாததோர் ஆக்கம் - அழகிய இடமுடைய பெரிய இராசமாபுரத்திற்கு நீங்காததொரு செல்வம்; சங்கம் நீள்நிதியால் தழைக்கின்றது - சங்கம் என்னும் பேரெண்ணையுடைய நிதியால் தழையா நின்றது.
|
|
|
(வி - ம்.) இனி, ”மாநகருண்மையால் நகர்க்கு ஆக்கம் அறாது; அவ் வாக்கம் ஒரு சங்க நிதியாலே தளிர்க்கின்றது' என்றுமாம். சங்கநிதி - அரசன்.
|
( 110 ) |
வேறு
|
|
| 140 |
தேன்றலைத் துவலை மாலை பைந்துகில் செம்பொன் பூத்து |
| |
ஞான்றன வயிர மாலை நகுகதிர் முத்த மாலை |
| |
கான்றமிர் தேந்தி நின்ற கற்பகச் சோலை யார்க்கு |
| |
மீன்றருள் சுரந்த செல்வத் திராசமா புரம தாமே. |
|
|
(இ - ள்.) தேன்தலைத் துவலைமாலை பைந்துகில் செம்பொன் பூத்து - தேனைத் தலையிலே துளியாகவுடைய மலர்மாலையும் பைந்துகிலும் செம்பொன்னும் மலர்ந்து ; ஞான்றன வயிரமாலை நகுகதிர் முத்தமாலை கான்று - தூக்கப்பெற்ற வயிரமாலையும் ஒளிமிகும் முத்துமாலையும் தோற்றுவித்து; அமிர்து ஏந்தி நின்ற கற்பகச்சோலை - அமிர்தத்தை ஏந்திநின்ற கற்பகச்சோலை; யார்க்கும் அருள் ஈன்று செல்வம் சுரந்த இராசமாபுரமது - யாவருக்கும் அருளை யீன்று செல்வத்தைச் சுரந்த இராசமாபுரம் என்னும் பெயரையுடையது.
|
|
|
(வி - ம்.) இனி, தான் சுரந்த அருளாலே யாவர்க்கும் மறுமையிற் கற்பகச்சோலையை யீன்று, அச்சோலையிற் செல்வத்தைத் தன்னிடத்தேயுடையது இராசமாபுரம் என்றுமாம்; என்றது, இதில் வாழ்வாரருளைக் கண்டு பிறர்க்கும் அருள்பிறந்து, சுவர்க்கம் எய்துவர் என்றவாறு.
|
|
|
இத்துணையும் நகரின் சிறப்புக் கூறினார்.
|
( 111 ) |
கோயிற் சிறப்பு
|
|
வேறு
|
|
| 141 |
வேக யானை மீளிவேல் வெய்ய தானை யைய கோன் |
| |
மாக நீண்ம ணிம்முடி மாரிவண்கை மாசில்சீ |
| |
ரேக வாணை வெண்குடை யிந்ந கர்க்கு மன்னவ |
| |
னாக நீர நன்னகர் நன்மை தன்னஞ் செப்புவாம். |
|