| பதுமையார் இலம்பகம் |
792 |
|
|
(வி - ம்.) 'நீலம் அமர்ந்துளவாயினும்' என்பதன் கருத்தைக் கூறிற்றிலள் பதுமை கேட்பின் இறந்துபடுவள் என்று கருதி. 'நின்னின் நீங்கினன்' என்றும் பாடம்.
|
( 238 ) |
வேறு
|
|
| 1404 |
சொரிபனி முருக்க நைந்து |
| |
சுடர்முகம் பெற்ற போதே |
| |
பரிவுறு நலத்த வன்றே |
| |
பங்கய மன்ன தேபோல் |
| |
வரிவளைத் தோளி கேள்வன் |
| |
வருமென வலித்த சொல்லாற் |
| |
றிருநலம் பிறந்து சொன்னா |
| |
டேனினு மினிய சொல்லாள். |
|
|
(இ - ள்.) சொரி பனி முருக்க நைந்து - பெய்யும் பனி வெதுப்புதலிற் கெட்டு; சுடர்முகம் பெற்றபோதே - ஞாயிறு தோன்றும் நிலைமையை அடைந்தபொழுதே; பங்கயம் பரிவுறும் நலத்த அன்றே - தாமரை அன்புறும் பண்பினையுடையவன்றே?; அன்னதேபோல் - அதனைப் போலவே; வரிவளைத் தோளி தேனினும் இனிய சொல்லாள் - வரி வளையணிந்த தோளியாகிய தேனினும் இனிமையான சொல்லையுடையவள்; கேள்வன் வரும் என வலித்த சொல்லால் - கணவன் வருவான் என்று தாய் கூறிய உறுதிமொழியால்; திருநலம் பிறந்து சொன்னாள் - அழகிய நலத்தைப் பெற்று ஒருமொழி கூறினாள்.
|
|
|
(வி - ம்.) சொரிபனி : வினைத்தொகை. முருக்குதல் - அழித்தல். சுடர் - ஞாயிறு. பங்கயம் - தாமரை. தோளி : பதுமை. வலித்தசொல் - துணிந்துரைத்த சொல்.
|
( 239 ) |
| 1405 |
நஞ்சினை யமுத மென்று நக்கினு மமுத மாகா |
| |
தஞ்சிறைக் கலாப மஞ்ஞை யணங்கர வட்ட தேனு |
| |
மஞ்சிறைக் கலுழ னாகு மாட்சியொன் றானு மின்றே |
| |
வஞ்சனுக் கினைய நீரேன் வாடுவ தென்னை யென்றாள். |
| |
|
|
(இ - ள்.) நஞ்சினை அமுதம் என்று நக்கினும் அமுதம் ஆகாது - கண்ணுக்கினிய தோற்றத்தால் நஞ்சை அமுதென்று எண்ணி நக்கினாலும் அமுதம் ஆகாது; அம்சிறைக் கலாப மஞ்ஞை அணங்கு அரவு அட்டதேனும் - அழகிய சிறகினையும் கலவத்தையும் உடைய மயில் வருத்தம் பாம்பைக் கொல்லுந் தகையதேனும்; அம் சிறைக் கலுழன் ஆகும் மாட்சி ஒன்றானும் இன்று - அழகிய சிறகினையுடைய கருடனைப்போலத் தொலைவி
|
|