| பதுமையார் இலம்பகம் |
793 |
|
|
லிருந்தாலும் நினைப்பித்துப் பாம்பை அச்சுறுத்தும் பெருமை சிறிதும் மயிலுக்கில்லை; மஞ்சனுக்கு இனைய நீரேன் வாடுவது என்னை என்றாள் - ஆண்மையுடைய அவனுக்கு நஞ்சும் மயிலும் போலும் நீர்மையுடையேன் அமுதமும் கருடனும் போன்ற மகளிரைப்போல வருந்துவது யாது பயனுடையது என்றாள்.
|
|
|
(வி - ம்.) அவன் கூடிய பின்பு நீங்கும் இயல்பைத் தானுடைமையால் தன்னை நஞ்சு என்றாள். நீக்கம் இல்லாத இன்பந் தருதலிற் பிறரை அமுதம் என்றாள். அட்டது என்றார் பாம்பு பல்லுயிரையும் வருத்துந் தன்மையை மயில் கொன்று அஞ்சுவித்தலை உட்கொண்டு; 'செய்ந்நன்றி கொன்ற மகற்கு' (குறள். 110) என்றாற்போல.
|
|
|
இதனால் தன் வீறின்மையையும் பிரிவின்கண் வருத்துந் தன்மையின்மையையும் கூறினாள். வீறு : தனியழகு.
|
( 240 ) |
வேறு
|
|
|
|
| 1406 |
பொய்கையுட் கமலத் தங்கட் |
| |
புள்ளெனு முரச மார்ப்ப |
| |
வெய்யவன் கதிர்க ளென்னும் |
| |
விளங்கொளித் தடக்கை நீட்டி |
| |
மையிருட் போர்வை நீக்கி |
| |
மண்ணக மடந்தை கோலம் |
| |
பையவே பரந்து நோக்கிப் |
| |
பனிவரை நெற்றி சோ்ந்தான். |
|
|
(இ - ள்.) பொய்கையுள் கமலத்தங்கண் புள் எனும் முரசம் ஆர்ப்ப - பொய்கைகளிலே தாமரை மலராகிய அழகிய இடத்திலிருந்து வண்டுகள் என்னும் பள்ளியெழுச்சி முரசம் ஆரவாரிக்க; கதிர்கள் என்னும் விளங்கு ஒளித் தடக்கை நீட்டி - கதிர்களாகிய விளக்கம் பொருந்திய ஒளியுறும் பெருங்கையினை நீட்டி; மைஇருள் போர்வை நீக்கி - காரிருளாகிய போர்வையை எடுத்துவிட்டு; மண்ணக மடந்தை கோலம் - நிலமகளின் ஒப்பனையை; பையவே பரந்து நோக்கி - மெல்ல விழிகளைப் பரப்பிப் பார்க்க; வெய்யவன் பனிவரை நெற்றி சேர்ந்தான் - ஞாயிறு குளிர்ந்த உதயகிரியின் முகட்டிலே வந்து சேர்ந்தான்.
|
|
|
(வி - ம்.) நோக்கி - நோக்க : எச்சத்திரிபு. 'நிலமகள் கோலத்தைப் பையப்பரவி மனத்தாலே நோக்கி' என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 241 ) |
| 1407 |
செவ்வழி யாழி னூறுந் தீஞ்சொலாட் குற்ற தெல்லா |
| |
மவ்வழி யரசற் குய்த்தார்க் கரசனு மவல மெய்தி |
| |
யெவ்வழி யானு நாடி யிமைப்பின தெல்லை யுள்ளே |
| |
யிவ்வழித் தம்மினென்றா னிவுளித்தோ்த் தானை யானே. |
| |
|