| பதுமையார் இலம்பகம் |
794 |
|
|
(இ - ள்.) செவ்வழி யாழின் ஊறும் தீஞ்சொலாட்கு உற்றது எல்லாம் - மகர யாழைப்போல இனிமையூறும் சொல்லாளாகிய பதுமைக்கு நேர்ந்ததை யெல்லாம்; அவ்வழி அரசற்கு உய்த்தார்க்கு - அந் நிலையிலே அரசனுக்கு அறிவித்தவர்கட்டு; இவுளித்தேர்த் தானையான் அரசனும் - குதிரைகள் பூட்டிய தேர்ப் படையை உடைய அரசனும்; அவலம் எய்தி - வருந்தி; எவ்வழியானும் நாடி - எல்லா நெறியினுஞ் சென்று தேடி; இமைப்பினது எல்லையுள்ளே இவ்வழித் தம்மின் என்றான் - ஒரு நொடியளவிலே இங்குக் கொண்டு வருக என்று பணித்தான்.
|
|
|
(வி - ம்.) செவ்வழியாழ் - செவ்வழிப்பண்ணுமாம். தீஞ்சொலாள் : பதுமை. அரசன் - ஈண்டுத் தனபதி. இமைப்பினதெல்லை - ஒரு நொடிப்பொழுதில். இவுளி - குதிரை. தானையான் : தனபதி.
|
( 242 ) |
வேறு
|
|
| 1408 |
மின்னுளே பிறந்ததோர் மின்னின் மேதகத் |
| |
தன்னுளே பிறந்ததோர் வடிவு தாங்குபு |
| |
முன்னினான் வடதிசை முகஞ்செய் தென்பவே |
| |
பொன்னுளே பிறந்தபொன் னனைய பொற்பினான். |
| |
|
|
(இ - ள்.) பொன்னுளே பிறந்த பொன் அனைய பொற்பினான் - பொன்னிலே தோன்றிய பொன்னைப் போன்ற அழகினான் ஆகிய சீவகன்; மின்னுளே பிறந்தது ஓர் மின்னின் - மின் முகிலாக அதற்குள்ளே பிறந்த ஒரு மின்னைப்போல; மேதகத்தன்னுளே பிறந்தது ஓர் வடிவம் தாங்குபு - பொருந்துவதற்குத் தகுதியாகிய தன்னிடத்திலே உண்டாகியதொரு வடிவை (பிறர் அறியாமலிருக்க) தான் தாங்கி; வடதிசை முகம் செய்து முன்னினான் - வடதிசையை நோக்கிப்போகக் கருதினான்.
|
|
|
(வி - ம்.) விரைவுக்கும் வடிவிற்கும் மின் உவமை. இஃது இல் பொருளுவமை. இதனால் தூர கமனஞ் கூறினாரென்பர் நச்சினார்க்கினியர். பொன்னுளே பிறந்தபொன் - மாசகன்ற பொன்.
|
( 243 ) |
| 1409 |
வீக்கினான் பைங்கழ னரல வெண்டுகி |
| |
லாக்கினா னிருதுணி யணிந்த பல்கல |
| |
னீக்கினா னொருமகற் கருளி நீணெறி |
| |
யூக்கினா னுவவுறு மதியி னொண்மையான். |
| |
|
|
(இ - ள்.) உவவு உறும் மதியின் ஒண்மையான் - முழுத் திங்களைப் போன்ற கலைகளையுடையவனும்; பைங்கழல் நரல வீக்கினான் - முன்பு புதிய கழலை ஒலிக்கக் கட்டியவனுமாகிய சீவகன்; வெண்துகில் இருதுணி ஆக்கினான் - கடிதுசெல்ல
|
|