| கேமசரியார் இலம்பகம் |
798 |
|
| 1412 |
வானின் வழங்கும் வண்கை மணிசெய் யார மார்பிற் |
| |
றேனும் வழங்கும் பைந்தார் விசையை சிறுவன்றேங்கொ |
| |
ணானம் வழங்குங் கோதை நைய வெய்ய வாய |
| |
கானம் வழங்கன் மேவிக் காலின் னேகி னானே. |
|
|
(இ - ள்.) வானின் வழங்கும் வண்கை - முகிலெனக் கொடுக்கும் கொடைக்கையினையும்; மணிசெய் ஆரம் மார்பின் - முத்துக்களால் ஆகிய மாலையணிந்த மார்பினையும்; தேனும் வழங்கும் பைந்தார் - மணமேயன்றித் தேனையும் நல்கும் பசிய தாரினையும் உடைய; விசையை சிறுவன் - விசையையின் மகன்; தேம்கொள் நானம் வழங்கும் கோதை நைய - வண்டுகள் தங்கும் புழுகு கமழும் மாலையாள் பதுமை வருந்த; வெய்ய ஆய கானம் வழங்கல்மேவி - கொடியன ஆகிய காடுகளிலே செல்லுதலை மேற்கொண்டு; காலின் ஏகினான் - காலால் நடந்து சென்றான்.
|
|
|
(வி - ம்.) கை மார்பு தார் என்னும் மூன்றும் சிறுவனுக்கு அடை மொழிகள். கை முதலியவற்றையுடைய சிறுவன்; விசையை சிறுவன் எனத் தனித்தனி கூட்டுக. தேம் - தேன.் காலின் ஏகினான் என்றது ஊர்திகளின்றி என்பதுபட நின்றது. நானம் - புழுகு. கோதை : ஆகுபெயர்; பதுமை.
|
|
|
'விசையை சிறுவன்', 'காலின் ஏகினான்' என்பன சீவகன் நிலைக்கு இரங்கிய நூலாசிரியரின் இரக்கமொழிகள். தேனும் : உம் : இசைநிறை. காலின் - காற்றைப்போல என்றலுமாம்.
|
( 1 ) |
| 1413 |
சிலைகொ ணாணிற் றீராத் திருந்து கற்பின் னவர்த |
| |
மிலைகொள் பூந்தா ருழுத வின்ப வருத்த நீங்க |
| |
முலைகொள் கண்கள் கண்ணின் னெழுதி முள்கு மொய்ம்பன் |
| |
மலைகொள் கானம் முன்னி மகிழ்வோ டேகு கின்றான். |
|
|
(இ - ள்.) சிலைகொள் நாணின் தீராத் திருந்து கற்பினவர் தம் - வில் தன்பாற் கொண்டுள்ள நாண் தான் கெடுமளவும் முறுக்குடையாததைப்போல இறுமளவும் கெடாத திருந்திய கற்பினையுடைய மகளிர்பால்; இலைகொள் பூந்தார் உழுத - (தன் மார்பிலணிந்த) இலைமிடைந்த மலர்மாலை உழுததால் உண்டான; இன்ப வருததம் நீங்க -இன்பச் சோர்வு தவிர; முலைகொள் கண்கள் கண்ணின் எழுதி முள்கும் மொய்ம்பன் - அவர்களுடைய முலை தம்மிடத்தே கொண்டுள்ள கண்களைத் தன் கண்களால் எழுதி முயங்கும் தோள்களையுடையவன்; மலைகொள் கானம் முன்னி - மலைகளையுடைய காட்டைப் பொருந்தி; மகிழ்வோடு ஏகுகின்றான் - களிப்புடன் செல்கின்றான்.
|
|
|
(வி - ம்.) வில்நாண் பசையிட்டு முறுக்கப்படுதலால் தான் அழியுந் துணையும் முறுக்குடைதலின்று; அதுபோல அன்பாற் பிணைக்கப்
|
|